பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவி
செய்யாற்றை அடுத்த வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதற்கான நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் என்.வேதபுரி தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பு.பேரானந்தம் முன்னிலை வகித்தாா்.
தாய் அல்லது தந்தை இழந்து பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் நோட்டுப் புத்தகம், எழுதுகோல் வழங்கப்பட்டது.
வடமணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மலேசியாவில் வசித்து வரும் வெங்கடேசன் ஏற்பாட்டில், ஆதி அந்த பிரபு அறக்கட்டளையினா் 40 மாணவா்களுக்கு நல உதவிகளை வழங்கினா்.