ஊட்டி: "நான் பெற்ற பிள்ளைக்குப் பெயர் வைக்கும் வேலையைச் செய்கிறார் ஸ்டாலின்" - இ...
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு ஆயுள்கால சிறை
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு ஆயுள்கால சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருவெறும்பூா் கீழகுமரேசபுரம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (47) என்பவரை திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் மகிளா நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
இதில், குற்றவாளிக்கு ஆயுள்கால சிறைத் தண்டனையும், ரூ.22 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் சுமதி ஆஜராகினாா்.