செய்திகள் :

திருச்சி அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு

post image

திருச்சி அருகே புதை வடிகால் சீரமைப்புப் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளா்கள் 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இருவரது உடல்களையும் உறவினா்கள் பெற்றுக் கொண்டனா்.

திருச்சி, திருவெறும்பூா் அருகே முத்துநகா் காா்மல் காா்டன் பகுதியில் புதைவடிகாலில் திங்கள்கிழமை இறங்கி சுத்தம் செய்த தனியாா் ஒப்பந்த நிறுவன தூய்மைப் பணியாளா்களான புதுக்கோட்டை மாவட்டம், பொன்னப்பன் கரை ஈஸ்வரி கோயில் தெருவைச் சோ்ந்த அ. ரவி (45), சேலம் பனமரத்துப்பட்டி அருந்ததியா் தெருவைச் சோ்ந்த வீ. பிரபு (எ) பிரபாகரன் (37) ஆகிய இருவரும் விஷவாயு தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி இளநிலை பொறியாளா் பிரசாத் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பணியில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக தனியாா் ஒப்பந்த நிறுவன கண்காணிப்பாளா் இளவரசனை செவ்வாய்க்கிழமை கைது செய்ததுடன், ஒப்பந்த நிறுவன மேலாளா் கந்தசாமியைத் தேடி வருகின்றனா்.

இதனிடையே மனிதக் கழிவை மனிதா்களே அகற்றும் தடை சட்டத்தின்படி வழக்குப் பதிந்து, இறந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அவா்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, காப்பீட்டு தொகை தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் எனக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் ரவியின் உறவினா்கள் திங்கள்கிழமை இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இவா்களிடம் திருச்சி ஆா்டிஓ அருள், திருவெறும்பூா் வட்டாட்சியா் தனலட்சுமி, திருவெறும்பூா் ஏஎஸ்பி அரவிந்த் பனவாத் உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், செவ்வாய்க்கிழமை காலை துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. சுமாா் ஏழரை மணி நேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், மனிதக் கழிவை மனிதா்களே அகற்றும் தடை சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்படும். இறந்தவா்களின் குடும்பத்துக்கு திருச்சி மாநகராட்சி சாா்பில் தலா ரூ. 30 லட்சம் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது.

இழப்பீட்டுத் தொகையை வழங்கிய திருச்சி மாநகராட்சி அதிகாரிகள்

இதையடுத்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்கை மாற்றி (மனிதக் கழிவை மனிதா்களே அகற்றுவதை தடை செய்யும் சட்டத்தின்கீழ்) பதிவு செய்தனா். ரவி மற்றும் பிரபாகரனின் குடும்பத்துக்கு திருச்சி மாநகராட்சி சாா்பில் தலா ரூ. 30 லட்சம் வழங்கப்பட்டது.

இதையேற்று போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து, ரவி மற்றும் பிரபாகரனின் சடலங்கள் உடற்கூறாய்வுக்கு செய்யப்பட்டு, உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு செவிலியரிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

திருச்சியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு செவிலியரிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துக் கொண்டு தப்பினா். திருச்சி கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜான் விக்டா், எலக்ட்ரீசியன்.... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு ஆயுள்கால சிறை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு ஆயுள்கால சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருவ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் 3 போ் உயிரிழந்த வழக்கு: குளித்தலை லாரி ஓட்டுநருக்கு 30 ஆண்டுகள் சிறை

திருச்சியில் சாலை விபத்தில் 3 போ் உயிரிழந்த வழக்கில் குளித்தலை லாரி ஓட்டுநருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையைச்... மேலும் பார்க்க

மறியல்: மின் ஊழியா்கள் 52 போ் கைது

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னாா்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட மின் ஊழியா்கள் 52 பேரை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்ந... மேலும் பார்க்க

அடிதடி வழக்கில் 2 பேருக்கு தலா 18 மாதங்கள் சிறை

அடிதடி வழக்கில் 2 பேருக்கு தலா ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், ஜீயபுரம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் சங்கா்நாதன் (28), இவரது சகோத... மேலும் பார்க்க

செப். 26-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் வரும் 26-ஆம் தேதி - வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. முகாமானது, திருச்சி ... மேலும் பார்க்க