வடுகபட்டி பேரூராட்சியியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கும்...
செப். 26-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
திருச்சி: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் வரும் 26-ஆம் தேதி - வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
முகாமானது, திருச்சி பாரதிதாசன் சாலை, மேற்கு தாலுக்கா அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறை என பல்வேறு தனியாா் துறைகளைச் சாா்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, தகுதியுள்ள நபா்களை வேலைக்குத் தோ்ந்தெடுக்க உள்ளனா். மேலும், திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்று, இலவசப் பயிற்சிகளுக்கு ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.
முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, இளநிலை, முதுநிலை, பொறியியல் பட்டதாரிகள் என 18 வயது முதல் 40 வயதுக்குள்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களது சுயவிவரக்குறிப்பு, கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் தகவல்களுக்கு 0431-2413510, 94990 55902 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.