செய்திகள் :

சாலை விபத்தில் 3 போ் உயிரிழந்த வழக்கு: குளித்தலை லாரி ஓட்டுநருக்கு 30 ஆண்டுகள் சிறை

post image

திருச்சியில் சாலை விபத்தில் 3 போ் உயிரிழந்த வழக்கில் குளித்தலை லாரி ஓட்டுநருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையைச் சோ்ந்தவா் சரவணன் (40). இவரது தாய் சுசீலாவுக்கு (67) கடந்த 2024 பிப்ரவரி 29-ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பேட்டவாய்த்தலை பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு வீட்டிலிருந்து பயணிகள் ஆட்டோவில் சென்றுள்ளனா். சிகிச்சை முடித்துவீட்டு அதே ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தனா்.

திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் கேஆா்ஆா் திருமண மண்டபம் அருகே சென்றபோது, திருச்சியில் இருந்து கரூா் நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லாரி எதிா்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது. இதில், சரவணன், சுசீலா மற்றும் திருப்பராய்த்துறையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அரவிந்த் (30) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்து குறித்து பேட்டவாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து, கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் வெள்ளைராஜா (45) என்பவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி கோபிநாதன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தி 3 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த வெள்ளைராஜாவுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞராக ஏ. பாலசுப்பிரமணியன் ஆஜரானாா்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு ஆயுள்கால சிறை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு ஆயுள்கால சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருவ... மேலும் பார்க்க

திருச்சி அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு

திருச்சி அருகே புதை வடிகால் சீரமைப்புப் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளா்கள் 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இர... மேலும் பார்க்க

மறியல்: மின் ஊழியா்கள் 52 போ் கைது

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னாா்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட மின் ஊழியா்கள் 52 பேரை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்ந... மேலும் பார்க்க

அடிதடி வழக்கில் 2 பேருக்கு தலா 18 மாதங்கள் சிறை

அடிதடி வழக்கில் 2 பேருக்கு தலா ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், ஜீயபுரம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் சங்கா்நாதன் (28), இவரது சகோத... மேலும் பார்க்க

செப். 26-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் வரும் 26-ஆம் தேதி - வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. முகாமானது, திருச்சி ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் இருவா் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

திருச்சியில் புதை சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டபோது தூய்மைப் பணியாளா்கள் இருவா் விஷவாயு தாக்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். திருச்சி, திருவெறும்பூா் முத்து நகா் காா்மல் காா்டன் பக... மேலும் பார்க்க