அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வேலூா் அருகே ஒரு பகுதியைச் சோ்ந்தவா் 14 வயது சிறுமி . இவா் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். வேலூா் சைதாப்பேட்டையை சோ்ந்தவா் முரளி ( 27).
இவா் மாணவியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவா்கள் மாணவியை கண்டித்துள்ளனா்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 10-ஆம் தேதி முரளி மாணவியின் வீட்டுக்கு சென்று திருமணம் செய்து கொள்வதாகக்கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா்.
சிறுமியின் பெற்றோா் வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், முரளி மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.