செய்திகள் :

பள்ளி முதல்வரை பணி நீக்கம் செய்ய தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த மாணவன்; 3 பேர் கைது - என்ன நடந்தது?

post image

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் இருக்கும் ஹுலிகட்டி என்ற இடத்தில் இருக்கும் அரசு பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக முதல்வராக இருந்தவர் சுலைமான் கோரிநாயக்.

இப்பள்ளியில் இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்த 12 மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்ப்பட்டனர். அவர்களது உயிருக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.

இது குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்ததில் தண்ணீரில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது. உடனே இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

போலீஸாரின் விசாரணையில் பள்ளியில் இருந்த தண்ணீர் தொட்டியில் விஷத்தை கலந்தது அதே பள்ளியில் படிக்கும் 5-வது வகுப்பு மாணவன் என்று தெரிய வந்தது.

சித்தராமையா

இதையடுத்து அம்மாணவனை பிடித்துச்சென்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மாணவனிடம் விஷம் கலந்த பாட்டிலை கொடுத்து தண்ணீர் தொட்டியில் கலக்க சொன்னது கிருஷ்ணா மதார் என்று தெரிய வந்தது.

கிருஷ்ணா மதாரை பிடித்து சென்று விசாரித்தபோது அவரை மிரட்டி சிலர் இக்காரியத்தை செய்ய செய்துள்ளனர் என்று தெரிய வந்ததது. சாகர் பாட்டீல் மற்றும் நாகனகவுடா பாட்டீல் ஆகியோர் கிருஷ்ணாவை மிரட்டி இக்காரியத்தை செய்ய வைத்துள்ளனர்.

கிருஷ்ணா வேறு சாதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வருவதாக தெரிகிறது. இக்காதலனை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம் என்று மிரட்டி அவர்கள் கிருஷ்ணாவிடம் இக்காரியத்தை செய்ய சொல்லி இருப்பதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கிருஷ்ணாவை மிரட்டிய சாகர் பாட்டீல் இந்து அமைப்பான ஸ்ரீ ராம சேனாவின் மாநில தலைவராக இருக்கிறார். சாகர் பாட்டீல் தான் இக்காரியத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளார். இதையடுத்து சாகர் பாட்டீலை அழைத்து சென்று போலீஸார் விசாரித்த போது, அங்குள்ள பள்ளியில் சுலைமான் நீண்ட காலமாக முதல்வராக இருந்தது பிடிக்காமல் அவருக்கு களங்கத்தை ஏற்படுத்தி அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்து விட சொன்னதாக சாகர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

கைதானவர்கள்

இதையடுத்து கிருஷ்ணா உட்பட மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்தார். இது "மத வெறுப்பு மற்றும் அடிப்படைவாதத்தால் இயக்கப்படும் கொடூரமான செயல்" என்று கூறிய அவர், இந்தக் குற்றம் சமூக நல்லிணக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளர். அவர் இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மத அடிப்படைவாதமும் வகுப்புவாத வெறுப்பும் கொடூரமான செயல்களுக்கு வழிவகுக்கும், மேலும் அப்பாவி குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்திருக்கக்கூடிய இந்த சம்பவம் அதற்கு ஒரு சான்றாகும்.

பெலகாவி மாவட்டம், சவதாட்டி தாலுகாவில் உள்ள ஹுலிகட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற தீங்கிழைக்கும் நோக்கத்துடன், மூன்று பேர் பள்ளி குழந்தைகளின் குடிநீரில் விஷம் கலந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். 15 நாள்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில், பல குழந்தைகள் நோய்வாய்ப்பட்டனர், ஆனால் அதிர்ஷ்டவசமாக, யாரும் உயிரிழக்கவில்லை," என்று தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. சண்முகவேல்; 30 லட்சம் நிவாரணம் வழங்கிய ஸ்டாலின்

திருப்பூர் உடுமலை அருகே கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. சண்முகவேல் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். திருப்பூர் மாவட்டம் சின்னகனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்தி... மேலும் பார்க்க

திருப்பூர்: எம்எல்ஏ தோட்டத்தில் `காவல் உதவி ஆய்வாளர்' கொடூரமாக வெட்டிக் கொலை; என்ன காரணம்?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்... மேலும் பார்க்க

வழக்கறிஞர் கொலை வழக்கு; 90 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - நடந்தது என்ன?

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகானந்தம். இவரது சித்தப்பா தண்டபாணி (60). இவருக்கும், முருகானந்தத்தின் தந்தையான... மேலும் பார்க்க

'50 சிசேரியன்' செய்த வசூல்ரஜா MBBS; 10 வருட 'போலி' மருத்துவர் - சிக்கியது எப்படி?

கமல் நடிப்பில் வந்த காமெடி படமான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படம் போல நிஜ வாழ்க்கையில் வலம் வந்த போலி மருத்துவர் அசாம் மாநிலத்தில் சிக்கியுள்ளார்.சில்சார் என்ற நகரில் மகளிர் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுண... மேலும் பார்க்க

நாமக்கல்: கடன் தொல்லை - ராசிபுரத்தில் 3 பெண் குழந்தைகளை கொலை செய்து தந்தை விஷம் அருந்தி தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள வேப்பங்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(35). இவரது மனைவி பாரதி(26). இந்த தம்பதியினர்களுக்கு 10 பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 4 குழந்தைகள் ... மேலும் பார்க்க

மதம் மாறி திருமணம் செய்ய மறுப்பு; வீடு புகுந்து பெண் கழுத்தை அறுத்து கொலை - ம.பி-யில் அதிர்ச்சி!

மத்திய பிரதேச மாநிலம், நவாரா என்ற இடத்தில் வசித்தவர் பாக்யஸ்ரீ(35). இவரிடம் அதே ஊரை சேர்ந்த ஷேக் ரியாஸ்(42) என்பவர் தன்னை திருமணம் செய்யும்படி நீண்ட நாட்களாக துன்புறுத்தி வந்தார். அவரை அடிக்கடி பின் த... மேலும் பார்க்க