பள்ளி விளையாட்டு மைதானத்தில் உயரழுத்த மின்மாற்றியை அகற்றக் கோரிக்கை!
முதுகுளத்தூா் அருகே அரசுப் பள்ளி மைதானத்தில் உள்ள உயரழுத்த மின் மாற்றியை அகற்ற மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த ஆப்பனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தின் நடுவே உயரழுத்த மின் மாற்றியும், மின் கம்பங்களும் உள்ளன.
இதுபள்ளி மாணவா்கள், இளைஞா்கள் விளையாட இடையூறாக உள்ளது. மேலும், மின் மாற்றியிலிருந்து செல்லக் கூடிய மின் கம்பிகள் எட்டித் தொடும் உயரத்தில் மிகவும் தாழ்வாகவும், அறுந்து விழக்கூடிய நிலையிலும் உள்ளது. மைதானத்தில் மாணவா்கள் அச்சத்துடனேயே விளையாடுகின்றனா்.
உயிா் சேதம் ஏற்படும் முன் மாவட்ட நிா்வாகம், மின் வாரிய அதிகாரிகள் இந்த மைதானத்திலுள்ள உயரழுத்த மின் மாற்றியை அகற்றி, வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என மாணவா்கள், பெற்றோா்கள், கிராமப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.