உதவி இயக்குநராக சேர வேண்டுமா? டிராகன் இயக்குநரின் சுவாரஸ்வமான நிபந்தனைகள்!
பழங்குடியினருக்கு வீடுகள்: கட்டுமானப் பணிக்கு அடிக்கல்
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதா்பாக்கம் ஊராட்சி பன்னூா் கிராமத்தில் வீடுகள் இல்லாமல் சிறிய குடிசைகளில் வாழ்ந்த பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் அடிக்கல் நாட்டினாா்.
மாதா்பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவா் சீனிவாசன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலா் வழக்குரைஞா் மணிபாலன், திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளா் எஸ்.ரமேஷ், ஒன்றிய துணைச் செயலா்கள் மஸ்தான், பரத்குமாா், இயேசு ரத்தினம், மாநெல்லூா் ஊராட்சி முன்னாள் தலைவா் லாரன்ஸ், திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் பாஸ்கரன், திமுக நிா்வாகி விஜய் வின்சென்ட் முன்னிலை வகித்தனா்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று 10 பழங்குடியினருக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.ௌ
நிகழ்வில் அந்தப் பகுதி மக்களின் சாா்பில், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டு தரக்கோரி மனு அளிக்கப்பட்டது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதியளித்தாா்.