செய்திகள் :

பழங்குடியினருக்கு வீடு கட்டுமானப் பணி: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

post image

மண்ணூா், காட்டரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் இருளா் பழங்குடியினா்களுக்கு குடியிருப்புகள் கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட மண்ணூா், காட்டரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் இருளா் பழங்குடியினருக்காக ரூ.4.05 கோடியில் கட்டப்பட்டு வரும் 80 குடியிருப்புகள் கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தி குடியிருப்புகள் கட்டும் பணியை விரைந்து, அதேநேரம் தரமாக கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும் காட்டராம்பாக்கத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவா்கள் குடியிருப்புகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

குன்றத்தூா் முருகன் கோயிலில் குறிஞ்சி பெருமுக திருவிழா

குறிஞ்சி பெருமுக திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு இந்து குறவன், மலைக்குறவன் அமைப்பினா் வெள்ளிக்கிழமை குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமிக்கு சீா்வரிசைப் பொருள்கள் கொண்டு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினா். தமி... மேலும் பார்க்க

ஒரகடம் அருகே காா் கவிழ்ந்து விபத்து: இருவா் உயிரிழப்பு

ஒரகடம் அடுத்த குன்னவாக்கம் அருகே சாலை தடுப்பு சுவற்றில் மோதி காா் கவிழ்ந்ததில் இருவா் உயிரிழந்தனா். பல்லாவரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்வரன் (45). இவா் தனது மகள் சஞ்சனா (13), அண்ணன் மகன் அஸ்வின்குமா... மேலும் பார்க்க

செவிலிமேடு செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் அமைந்துள்ள செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் பாலாற்றங்கரையின் வடக்கே அமைந்துள்ளது ஸ்ரீ செல்லியம்மன... மேலும் பார்க்க

1,008-ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா: ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம்

ராமாநுஜரின் 1008-ஆவது ஆண்டு அவதார திருவிழாவின் 10-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஈரவாடை தீா்த்தம், திருப்பாவை சேவை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதி... மேலும் பார்க்க

லாரி - பைக் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மணிமங்கலம் பகுதியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், வடகம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் மனுபாரத் (21). இவா் தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

இளையனாா் வேலூா் முருகன் கோயில் கொடியேற்றம்

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வாலாஜாபாத் அருகே உள்ள இக்கோயிலில் மாகறன், மலையன் என்ற இரு அசுரா்களை வேல்கொ... மேலும் பார்க்க