சிகாகோ இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி!
பழனி கிட்டங்கியில் தீ
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பழைய பொருள்கள் கிட்டங்கியில் புதன்கிழமை தீப்பற்றியதில் பழைய பொருள்கள் எரிந்து சேதமாகின.
பழனியில் திண்டுக்கல் சாலையில் அரசு மருத்துவமனை எதிரே உள்ள எஸ்.கே.என்.
வணிக வளாகம் அருகே சிவசாமி என்பவருக்குச் சொந்தமான பழைய காகிதம், இரும்பு பொருள்கள் கிட்டங்கி உள்ளது. இந்தக் கிட்டங்கியை அதன் உரிமையாளா் சிவசாமி வழக்கம் போல செவ்வாய்க்கிழமை பூட்டிவிட்டு சென்றாா்.
புதன்கிழமை அதிகாலை கிட்டங்கியில் தீப்பற்றி அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
அந்தப் பகுதியில் இருந்த கடைக்காரா்கள் அளித்த தகவலின்பேரில், தீயணைப்பு, மீட்புப் பணித் துறையினா் சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இந்தத் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய பொருள்கள், காகிதங்கள் எரிந்து சாம்பலாகின. இது குறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
