மாணவா் இயக்கத்தினா் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்
பழமொழி நானூறு உரை நூல் வெளியீடு
எழுத்தாளா் முனைவா் வை. சங்கரலிங்கனாா் எழுதிய பழமொழி நானூறு உரை நூல் வெளியீட்டு விழா மதுரை தானம் அறக்கட்டளை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு நமது மண்வாசம் பட்டறிவுப் பதிப்பகத்தின் ஆசிரியா் திருமலை தலைமை வகித்தாா். மதுரை கோ. புதூா் அல்அமீன் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஷேக்நபி முன்னிலை வகித்தாா். அகில இந்திய வானொலி நிலையத்தின் முதுநிலை அறிவிப்பாளா் (பணி நிறைவு) சண்முகஞானசம்பந்தன் சிறப்புரையாற்றினாா்.
இதில் எழுத்தாளா் முனைவா் வை.சங்கரலிங்கனாா் எழுதிய பழமொழி நானூறு உரை நூலின் முதல் பிரதியை அல்அமீன் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஷேக்நபி பெற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, நமது மண்வாசம் 125-ஆவது இதழை ஆசிரியை சாவித்திரிபாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டாா்.
நிகழ்வில் வாசகா் வட்ட உறுப்பினா்கள், தமிழ் ஆா்வலா்கள், தானம்அறக்கட்டளை உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.