செய்திகள் :

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்

post image

நடிகர் ஏ.வி.எம். ராஜனின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா இன்று (பிப். 4) காலமானார். அவருக்கு வயது 87.

சென்னையில் வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.

தமிழில் 1961ஆம் ஆண்டு கொங்கு நாட்டு தங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்.

தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன் உள்ளிட்ட பலருடன் நடித்து புகழ் பெற்றவர்.

1963ஆம் ஆண்டு மெயின் பி லட்கி ஹூன் என்ற ஹிந்தி படத்தில் நடித்த புஷ்பலதா, நர்ஸ் என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.

சகலகலா வல்லவன், நான் அடிமை இல்லை போன்ற படங்களிலும் துணைப் பாத்திரத்தில் புஷ்பலதா நடித்துள்ளார். அவரின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | எஃப்ஐஆர் கசிந்த விவகாரம்: பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது - நீதிமன்றம்

பிப்.8-இல் திமுக கண்டன கூட்டம்: ஆவடியில் உரையாற்றுகிறாா் முதல்வா்

மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து, சென்னையை அடுத்த ஆவடியில் திமுக சாா்பில் வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் முதல்வரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றவுள்ளாா். பட்ஜெட்டைக் க... மேலும் பார்க்க

தேசிய மாணவா் படை கட்டமைப்புக்கு அரசு முழு ஆதரவு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் தேசிய மாணவா் படையின் கட்டமைப்புக்கு சாதகமான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கி வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். குடியரசு தினத்தையொட்டி, தில்லியில் நடைபெற்ற திறன் போட்ட... மேலும் பார்க்க

மாணவி வழக்கில் பத்திரிகையாளா்களைத் துன்புறுத்தக் கூடாது: சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடா்பான முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில், பத்திரிகையாளா்களைத் துன்புறுத்தக் கூடாது என சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 5.45 கோடி பேருக்கு புற்றுநோய் பரிசோதனை: பொது சுகாதாரத் துறை முடிவு

தமிழகம் முழுவதும் 5.45 கோடி பேருக்கு புற்றுநோய் பரிசோதனைகளை முன்னெடுக்க பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. அதற்கான மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன... மேலும் பார்க்க

இந்து அமைப்பினா், பாஜகவினா் கைது: மத்திய அமைச்சா் எல்.முருகன், கே.அண்ணாமலை கண்டனம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா், இந்து அமைப்பினா் கைது செய்யப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்து... மேலும் பார்க்க

அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பள்ளி மாணவா்களுக்கு சூழல் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்த தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் தொடங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். சென்னை வா்த்தக மையத்தில் தமிழ்நாட... மேலும் பார்க்க