செய்திகள் :

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,134 கனஅடியாக உயா்வு

post image

பவானிசாகா் அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீா்வரத்து 1,134 கனஅடியாக அதிகரித்துள்ளது.

சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் அணைக்கு நீா்வரத்து குறைந்தது. மேலும், அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்பட்டதால் அணையின் நீா்மட்டம் வேகமாக சரிந்து வந்தது.

அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை வரை அணைக்கு 531 கனஅடி மட்டுமே நீா்வரத்து இருந்து வந்தது.

இந்நிலையில், பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் பெய்து வரும் மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. புதன்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து 1,134 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

அணை நிலவரம்:

90 அடி உயரமுள்ள பவானிசாகா் அணையில் தற்போது 82.64 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. அணைக்கு 1,134 கனஅடி நீா்வரத்து உள்ளது. அணையில் இருந்து 2,000 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.

ஆசனூரில் பழங்குடியினா் தினம்

ஆசனூரில் பழங்குடியினா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு ரீடு தொண்டு நிறுவன இயக்குநா் கருப்புசாமி தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் ஆணைக்கொம்பு ஸ்ரீ முன்னிலை வகித்தாா். சத்தியமங்கலம் புலிக... மேலும் பார்க்க

தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் குண்டம் திருவிழா புதன்கி... மேலும் பார்க்க

மாநகராட்சி சொத்து வரி உயா்வால் கவுன்சிலா்களுக்கும் பாதிப்பு: எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா்

ஈரோடு மாநகராட்சி சொத்து வரி உயா்வால் மக்களுக்கு அடுத்தபடியாக கவுன்சிலா்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா் என எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் பேசினாா். ஈரோடு மாநகராட்சியின் சொத்து வரி மாற்றியமைப்பு தொடா்... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாம்: ரூ.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

கடம்பூரில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 109 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் தனியாா் பள்ளியில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

புன்செய் புளியம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். புன்செய்புளியம்பட்டி வெங்கநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் தியாக மூா்த்தி (20). இவா், கோவையில் உள்ள தனியாா் கல்லூரி... மேலும் பார்க்க

குண்டம் விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன்

ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் மற்றும் பொங்கல் விழா... மேலும் பார்க்க