பவானிசாகா் அணையில் மே 26-இல் நீா் திறப்பு
பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்காக மே 26-ஆம் தேதி முதல் நீா் திறந்து விடப்படவுள்ளது.
இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களிலுள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அவற்றின் முதல் போக பாசனத்துக்காக வரும் திங்கள்கிழமை (மே 26) முதல் செப். 22-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படவுள்ளது.
இதனால், ஈரோடு மாவட்டத்தில் கோபி, அந்தியூா், பவானி வட்டத்திலுள்ள 24,504 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.