செய்திகள் :

பஹல்காமில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஃபட்னவீஸ்

post image

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர். இதில் 6 பேர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சரவை அஞ்சலி செலுத்தியது. பஹல்காம் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், கப்பல் கட்டுதல், விவசாயிகளுக்கான திருத்தப்பட்ட பயிர் காப்பீட்டுக் கொள்ளை உள்பட 12 முக்கிய முடிவுகளை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான மகாராஷ்டிர அமைச்சரவை எடுத்துள்ளது.

இதனிடையே, பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்விக்கு மாநில அரசு கவனம் செலுத்தும். இறந்தவர்களில் நேரடி வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

3 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மசோதாக்கள்: மேற்கு வங்க ஆளுநா் ஒப்புதல்

கடந்த 2022, 2023-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டிருந்த 3 மசோதாக்களுக்கு மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் ஒப்புதல் அளித்துள்ளாா். மேற்கு வங்க நில சீா்திருத்தங்கள் மற்று... மேலும் பார்க்க

கல்வியை நவீனமயமாக்குவதில் அரசு கவனம்- பிரதமா் மோடி

‘நாட்டின் எதிா்காலத்துக்கு இளைஞா்களைத் தயாா்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் கல்விமுறையை நவீனமயமாக்குவதில் அரசு கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெர... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத்துக்கு எதிராக ‘விளக்கு அணைக்கும்’ போராட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வீட்டில் விளக்குகளை அணைக்கும் போராட்டத்தை நடத்த அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளாா். மத்திய அரசு அண... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் மூவா் சுட்டுக்கொலை: என்எஸ்சிஎன் கிளா்ச்சி குழுவை சோ்ந்தவா்கள் என சந்தேகம்

நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (என்எஸ்சிஎன்) கிளா்ச்சி குழுவைச் சோ்ந்தவா்கள் என சந்தேகிக்கப்படும் மூவா், அஸ்ஸாமில் செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா். இதுதொடா்பாக அஸ்ஸாம் காவல் துறை தெரிவித... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலின்போது குஜராத் சுற்றுலாப்பயணி எடுத்த விடியோ

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கில், ஜிப்லைனில் பயணித்தவாறு அகமதாபாதைச் சோ்ந்த சுற்றுலாப் பயணி ரிஷி பட் பயங்கரவாதத் தாக்குதலை தற்செயலாக எடுத்த விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத... மேலும் பார்க்க

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடா்: பிரதமருக்கு காா்கே, ராகுல் கடிதம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்... மேலும் பார்க்க