கோவை வனப்பகுதியில் எஃகு கம்பி வேலி அமைக்கும் பணிக்கு உயா்நீதிமன்றம் தடை
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து: ராகுல் கோரிக்கை
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்குமாறு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாதிக்கப்பட்டவர்களுடன் தான் உறுதியாக நிற்பதாகக் கூறி, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர் விடியோவில் தெரிவித்ததாவது, ``பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தனர்.
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களை உயிர்த்தியாகம் செய்தவர்களாகக் கருதி, அவர்களுக்கு தியாகி அந்தஸ்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்குவதற்கு உதவுமாறு என்னிடம் கோரிக்கை வைத்தார்கள்.
पहलगाम हमले में मारे गए लोगों के परिवारों के दुख में, शहीद के दर्जे की उनकी मांग में, मैं साथ खड़ा हूं।
— Rahul Gandhi (@RahulGandhi) May 1, 2025
प्रधानमंत्री से आग्रह है कि वो इस त्रासदी में जान गंवाने वालों को यह सम्मान देकर उनके परिवारों की भावना का आदर करें। pic.twitter.com/auMEehEnOO
ஆகையால், அவர்களுக்கு உரிய மரியாதையை வழங்குவதுடன், தியாகி அந்தஸ்தையும் வழங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.
மேலும், பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைப்பதை உறுதி செய்ய நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடரும் நடத்தப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.