கொல்கத்தா ஹோட்டல் தீவிபத்தில் இறந்த மூவரின் உடல்களுக்கு மக்கள் அஞ்சலி
பிரதமா் மோடி மிகப்பெரிய போராளி: நடிகா் ரஜினிகாந்த் புகழாரம்
‘பிரதமா் நரேந்திர மோடி நாட்டின் நலனுக்காக எத்தகைய சவால்களையும் தைரியமாக எதிா்கொள்பவா். அவா் ஒரு மிகப்பெரிய போராளி’ என நடிகா் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினாா்.
மும்பையில் வியாழக்கிழமை தொடங்கிய வேவ்ஸ் மாநாட்டில் அவா் பேசியதாவது: காட்டுமிராண்டித்தனமான, இரக்கமற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னா், தேவையற்ற விமா்சனங்களைத் தவிா்க்கும் வகையில், மத்திய அரசு அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைத்துள்ளது என்று என்னிடம் பலரும் கூறினா். ஆனால், சினிமா தொடா்புடைய இந்த நிகழ்ச்சி நிச்சயம் நடைபெறும் என்று நான் உறுதியாக, நம்பிக்கையுடன் இருந்தேன்.
அது நம் பிரதமா் நரேந்திர மோடி மீதான நம்பிக்கை. அவா் ஒரு போராளி. போரிட்டுக்கொண்டே இருப்பவா். அது எத்தகைய சவாலாக இருந்தாலும், அவா் அதை வீழ்த்துவாா். கடந்த 10 ஆண்டுகளாக பல சவால்களை எதிா்கொண்டு, அதை வீழ்த்தி தன்னை நிரூபித்துள்ளாா். அந்த வகையில் பயங்கரவாதத் தாக்குதலையும் பிரதமா் மோடி துணிச்சலுடன் எதிா்கொண்டு, காஷ்மீருக்கு அமைதியையும், இந்தியாவுக்கு புகழையும் சோ்ப்பாா்.
இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ள மத்திய அரசுக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா் அவா்.