பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு
பஹல்காம் தாக்குதல்: பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி!
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு நிவாரண நிதியுதவி அறிவித்து அஸ்ஸாம் முதல்வர் உத்தரவிட்டார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 26 பேரின் குடும்பங்களுக்கும் ரூ.5 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல், உலகளவில் கடும் கண்டனங்களைக் கிளப்பியுள்ளது.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வரும்நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியாவும், இந்தியா மீது பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றன.
இதையும் படிக்க:இந்தியாவுடன் போர்? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்திய பாகிஸ்தான்!