போக்குவரத்து ஓய்வூதியா்கள் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க முடிவு!
பஹல்காம் தாக்குதல்: விசாரணையைத் தொடங்கிய என்ஐஏ!
ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டதையடுத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த இடத்தில் கடந்த புதன்கிழமை முதல் முகாமிட்டுள்ள என்.ஐ.ஏ. குழுக்கள், ஆதாரங்களைத் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன. நேரில் பார்த்த சாட்சிகளிடம் நுணுக்கமான விசாரணையை என்ஐஏ அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் விசாரணைக்கு உதவியாக செயல்பட்ட தேசிய புலனாய்வு முகமை, முழுமையாக அந்த புலனாய்வை தன்வசம் எடுத்துக்கொள்ளத் தீா்மானித்தது.
ஒரு ஐ.ஜி., ஒரு டி.ஐ.ஜி, ஒரு எஸ்.பி. ஆகியோரால் என்ஐஏ விசாரணை நடவடிக்கைகள் மேற்பாா்வையிடப்பட்டு வருகிறது.
பயங்கரவாதிகளின் செயல்பாடுகளைக் குறித்த தடயங்களை விசாரணை செய்யும் என்.ஐ.ஏ. குழுக்கள், மக்கள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளைக் கவனித்து வருகின்றன.
நாட்டை உலுக்கிய இந்தத் தாக்குதலில் ஈடுப்பட்டவர்களை கண்டறியவதற்காக, தடவியல் மற்றும் பிற நிபுணர்களின் உதவியுடன் எ.ஐ.ஏ.க்கள் குழுக்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும், 3 தமிழர்கள் உள்பட 17 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.