ரூ.6.77 கோடியில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் புதுப்பிப்பு: காணொலி காட்சி மூலம் பிர...
'பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும்' - சுப்ரமணியன் சுவாமி
பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும் என்று ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பிகார் பாட்னாவில் ஜெய் பிரகாஷ் நாராயண் விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நமது நாகரிக வரலாற்றில் மிகவும் கொடூரமான சம்பவங்களில் ஒன்று எனத் தெரிவித்தார்.
"பஹல்காமில் தாக்குதல் நடத்தியதன் மூலமாக பாகிஸ்தான் முதலில் மோதலை உண்டாக்கியது. இது நமது நாகரிக வரலாற்றில் மிகவும் கொடூரமான சம்பவங்களில் ஒன்று. அதனால் பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி வெளிநாடுகளுக்குச் சென்று எம்.பி.க்கள் விளக்கமளிப்பதால் எந்த தாக்கமும் இருக்காது. அவர்கள் தங்கள் பொழுதைக் கழிக்கலாம் என்பது அனைவருக்கும் தெரியும்" என்றார்.
இதையும் படிக்க | மீண்டும் கரோனா பரவலா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?