பாகிஸ்தான்: சிந்து நதி டெல்டாவிலிருந்து 12 லட்சம் மக்கள் வெளியேற்றம்; எழுந்த அச...
பாகிஸ்தான் அதிபராகும் ராணுவத் தலைமைத் தளபதி? ராணுவம் விளக்கம்!
பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு, அந்நாட்டு ராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், அதிபர் ஆசிஃப் அலி சர்தாரிக்கு பதிலாக, புதிய அதிபராகப் பதவியேற்கவுள்ளதாக, சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
இந்நிலையில், அந்தச் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்ற வதந்திகள் எனக் கூறி பாகிஸ்தான் ராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் அஹமது ஷரீஃப் சௌதரி கூறுகையில், நாட்டை ஆட்சி செய்வதில், ராணுவத் தலைமைத் தளபதிக்கு எந்தவொரு ஆர்வமும் இல்லை எனக் கூறியுள்ளார்.
இத்துடன், அதுபோன்ற எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை எனவும், இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை எனவும் அவர் நிராகரித்துள்ளார்.
நீண்டகாலமாக இணையத்தில் பரவி வரும் இந்தச் செய்தியை, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, கடந்த ஜூலை 10 ஆம் தேதி வதந்தி எனக் கூறி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?