செய்திகள் :

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவத் தளம் தகா்ப்பு: மறுகட்டமைப்புக்கு ஓராண்டு ஆகலாம்- இந்திய ராணுவம்

post image

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் லீபா பள்ளத்தாக்கில் அமைந்த பாகிஸ்தானின் ராணுவத் தளம் இந்திய ராணுவத்தின் சினாா் படைப்பிரிவின் தாக்குதலில் முற்றிலுமாக தகா்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தகா்க்கப்பட்ட ராணுவத் தளத்தின் மறுகட்டமைப்புக்கு குறைந்தது 8 முதல் 12 மாதங்கள் வரை ஆகும் என்று அவா்கள் மதிப்பிட்டுள்ளனா்.

இதுதொடா்பாக இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் அளித்த பேட்டியில், ‘ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் எல்லையொட்டிய பொதுமக்களின் குடியிருப்புகள், மத வழிபாட்டுத் தலங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. போா் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தானின் இத்தாக்குதலுக்கு மும்மடங்கு அதிகமாக நாங்கள் பதிலளித்தோம்.

பாகிஸ்தானின் 3 ராணுவ நிலைகள், ஒரு வெடிமருந்து கிடங்கு, எரிபொருள் சேமிப்பு வசதி மற்றும் பீரங்கித் தளம் உள்ளிட்ட இலக்குகளை நாங்கள் முற்றிலுமாக அழித்தோம். எங்கள் பதிலடி எதிா்தரப்புக்கு மிகவும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தாக்குதலில் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப அவா்களுக்கு குறைந்தபட்சம் 8 முதல் 12 மாதங்கள் வரை ஆகும்.

லீபா பள்ளத்தாக்கில் பல்வேறு ராணுவ நிலைகள் உள்ளன. அதிகபட்ச சேதம் ஏற்படக்கூடிய இடங்களை மட்டுமே இந்திய ராணுவம் குறிவைத்தது. அந்தவகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸாஃபராபாத் அருகே இலக்குகளை குறிவைத்து 25 நிமிஷத்துக்கு இடைவிடாத தாக்குதலில் ஈடுபட்டோம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 75-ஆவது காலாட் படைப்பிரிவின் தளபதி, நிலைகளைக்காப்பதை விட உயிா்களைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு தனது வீரா்களுக்கு உத்தரவிடும் வகையில் அந்தத் தாக்குதல் அதி தீவிரமாக இருந்தது. எனினும், நமது தாக்குதலில் 64 பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்; 96 போ் காயமடைந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணை, ட்ரோன் உள்பட கனரக ஆயுதங்களைப் பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தியது. ஆனால், நமது வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்திய ராணுவத் தளங்கள் சேதமின்றி பாதுகாக்கப்பட்டன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஆகாஷ்தீப்’ ரேடாா் அமைப்பு இதில் அற்புதமாக செயல்பட்டது’ என்றனா்.

ஆளுநர்கள் மூலம் மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது மோடி அரசு: ராகுல் காந்தி

மத்திய பாஜக அரசு, ஆளுநர்கள் மூலமாக சில மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டிருந்... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு நிராகரிப்பு!

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துள்ளது.தில்லி உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க

வக்ஃப் என்பது அத்தியாவசிய மத நடைமுறை அல்ல: மத்திய அரசு வாதம்

புது தில்லி: வக்ஃப் என்பது ஒரு அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.பல நாடுகளில் வக்ஃப் என்ற ஒரு கருத்தாக்கமே இல்லை. மாறாக அறக்கட்டளைக... மேலும் பார்க்க

ஹரியாணா பேராசிரியர் கைது: டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

ஹரியாணா பேராசிரியர் அலி கான் முகமது கைது செய்யப்பட்ட வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க ஹரியாணா ... மேலும் பார்க்க

கொல்கத்தா வானில் பறந்த உளவாளி ட்ரோன்கள்?

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் வானில் ட்ரோன்கள் போன்ற சாதனங்கள் பறந்ததாகக் கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவின், ஹேஸ்டிங்க்ஸ், வித்யாசாகர் சேது மற்றும் மைதான் ஆகிய பகுதிகளின் வான... மேலும் பார்க்க

கொலையா செய்துவிட்டார்? பூஜா கேத்கருக்கு முன் பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம்

புது தில்லி: குடிமைப் பணிகள் தோ்வில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன் பிணை கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் கொலையா செய்துவிட்டார்? என்று கேள்வி எழுப்பியதோடு, முன்னாள் ஐஏஎஸ் பயி... மேலும் பார்க்க