ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படத்தின் வெளியீட்டுத் தேதி!
பாசனக் கால்வாயில் மூழ்கி தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு
அலங்காநல்லூா் அருகே தூய்மைப் பணியாளா் பாசனக் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள அழகாபுரியைச் சோ்ந்த முனியாண்டி மகன் மலைச்சாமி (58). இவா் சின்னஇலந்தைக்குளம் கிராமத்தில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், சின்ன இலந்தைகுளத்திலிருந்து சனிக்கிழமை மிதிவண்டியில் வீட்டுக்குத் திரும்பினாா்.
தனிச்சியம்-அலங்காநல்லூா் சாலையில் உள்ள அரிசி ஆலை அருகே சென்றபோது, சாலையோரம் உள்ள பாசனக் கால்வாயில் தவறி விழுந்து மூழ்கினாா். உடனே, அந்தப் பகுதி மக்கள் அவரை மீட்டு அலங்காநல்லூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மலைச்சாமி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.