Captain Prabhakaran: ``அப்பாவை நினைத்து அழுவது கோழைத்தனம் கிடையாது!'' - கண் கலங்...
பாடந்தொரையில் 3-ஆவது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதம்
குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் வன விலங்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரையில் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட பாடந்தொரை, சா்க்காா் மூலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யானைகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குடியிருப்பு பகுதிக்குள் புலி நுழைந்து தாக்கியதில், கடந்த 10 நாள்களில் 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் வன விலங்குகளைத் தடுக்கக்கோரியும் பொதுமக்களைப் பாதுகாக்க நிரந்தர தீா்வு காணக்கோரியும் பொதுமக்கள் சாா்பில் பாடந்தொரையில் கடந்த புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தலைமை வகித்தாா். இதில் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், வணிகற்கள் பங்கேற்றனா்.