``நாங்கள் கூட்டணி அமைத்தால் மட்டும் பாஜக மதவாத கட்சியா?'' - ஸ்டாலினுக்கு எடப்பாட...
பாட்னா தொழிலதிபர் கொலை: இறுதிச் சடங்குக்கு மாலையுடன் வந்த குற்றவாளி கைது!
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கோபால் கெம்கா சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது இறுதிச் சடங்குக்கு மாலையுடன் வந்த குற்றவாளியை, காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
பாட்னாவில், தொழிலதிபர் கோபால் கெம்கா, வெள்ளிக்கிழமை இரவு, அவரது வீட்டு வாசலில் கூலிப் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், பாட்னாவில், கொலை செய்வதற்கு முன்பி, தல்தாலி பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு மூன்று பேர் வந்துள்ளனர். பிறகு அதில் ஒருவர் கெம்காவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்குதான் கொலை நடந்துள்ளது.
இந்த முக்கிய குற்றவாளி, ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாஜகவுடன் தொடர்புடைய கோபால் கெம்கா, வெள்ளிக்கிழமை இரவு, வீட்டுக்கு வந்து 11.40 மணியளவில் காரிலிருந்து இறங்கியபோது, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இவரது இறுதிச் சடங்குகள் ஜூலை 6ஆம் தேதி நடந்தது. இறுதிச் சடங்கின் போது, கெம்கா உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக மாலையுடன் வந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்திருப்பதாகவும், தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், போலீஸ் பாதுகாப்புக் கேட்டிருந்த கோபால் கெம்கா, கடந்த வாரம் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது குறித்து அவரது குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.