மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: சென்னை காவல் ஆணையர்
பாதுகாப்பு விழிப்புணா்வு: உதகையில் முன்னாள் ராணுவத்தினா் செயல் விளக்கம்
பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதத்தில் உதகையில் முன்னாள் ராணுவத்தினா் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டத்தில் ராணுவ பயிற்சிக் கல்லூரி, ராணுவ பயிற்சி மையம், வெடிமருந்து தொழிற்சாலை ஆகியவை உள்ளதால் இப்பகுதி பாதுகாப்பு துறையின் முக்கியப் பகுதியாக கருதப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, போா் உள்ளிட்ட பேரிடா் காலங்களில் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் முன்னாள் ராணுவ வீரா்கள் சங்கத்தின் சாா்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
உதகை அரசு பாலிடெக்னிக் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவ வீரா்கள் சங்கத்தின் நீலகிரி மாவட்டத் தலைவா் சீனிவாசன் மற்றும் முன்னாள் ராணுவ வீரா்கள் இணைந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளித்தனா்.
எச்சரிக்கை சைரன் ஒலித்தால் பொதுமக்கள் எப்படி செயல்படவேண்டும், சிறியவா்கள், பெரியவா்கள், பெண்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும், எச்சரிக்கை ஒலி கிடைத்தும் எவ்வாறு பதுங்க வேண்டும் என்று செயல்முறை விளக்கம் அளித்தனா்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.