செய்திகள் :

பாமக பொதுக்குழு விவகாரம்: ராமதாஸை சந்திக்கிறார் அன்புமணி!

post image

பாமக பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில் அன்புமணி, ராமதாஸை இன்று(டிச. 29) சந்திக்கிறார்.

புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

இதனால் பாமக நிர்வாகிகள், தொண்டர்களிடையே பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

நேற்று நடைபெற்ற பாமக பொதுக்குழுவில், பாமக மாநில இளைஞரணி சங்கத் தலைவராக ராமதாஸ் மகள் வழிப்பேரன் பரசுராமன் முகுந்தனை நியமித்தது தொடர்பாக கூட்ட மேடையில் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... மன்மோகன் சிங்: கருணை காட்டும் வரலாறு!

அப்போது, கட்சியில் சேர்ந்து 4 மாதங்களே ஆனவருக்கு பதவி எதற்கு? எனக்கு உதவியாக யாரும் தேவையில்லை என அன்புமணி கூற, முகுந்தன்தான் பாமக இளைஞரணித் தலைவர் என ராமதாஸ் உறுதியாக தெரிவித்ததை அடுத்து மேடையிலேயே மைக்கை தூக்கிப் போட்டார் அன்புமணி.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. இளைஞரணித் தலைவர் நியமனத்துக்கு நன்றி தெரிவிக்குமாறு ராமதாஸ் கூறியதும் கெளரவத் தலைவர். ஜி.கே. மணி மைக்கை எடுத்தார்.

அப்போது அவரிடம் மைக்கை கேட்டு வாங்கிய அன்புமணி பனையூரில் எனக்கு அலுவலகம் இருக்கிறது. இனி தொண்டர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம் என தொலைபேசி எண்ணையும் அறிவித்தார். இது பாமக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி அக்கட்சியின் நிறுவனரும் தந்தையுமான ராமதாஸை இன்று(டிச. 29) சந்திக்கிறார்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.அருண் கே.ஆர். இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை, கவிப்பிரியா, ஸ்ரீரஞ்சினி ஆகியோர் நடிப்பில் வெளியான ஆரகன் திரை... மேலும் பார்க்க

ஆலந்தூர்: மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவர் உள்பட இருவர் பலி!

சென்னை ஆலந்தூர் அருகே மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவர் உள்பட இருவர் பலியாகியுள்ளனர்.நேற்று இரவு சென்னை ஆலந்தூர் அருகே மது போதையில் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற கல்லூரி மாணவர் உள்பட இரண்டு இளைஞர்க... மேலும் பார்க்க

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா: ஜன. 13-ல் முதல்வர் தொடக்கி வைக்கிறார்.

2025ஆம் ஆண்டின் பொங்கல் விழாவையொட்டிதமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகள் சிறக்கும் வகையில் நடைபெறும் ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா -2025’ கலை நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் ஜன. 13 ஆம் தேதி தொடங்கி வை... மேலும் பார்க்க

மாலத்தீவின் வெளியுறவுத் துறை அமைச்சர் இன்று இந்தியா வருகை!

மாலத்தீவு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று (ஜன.2) இந்தியா வருகிறார். இந்தியப் பெருங்கடலிலுள்ள தீவு நாடான மாலத்தீவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா கலீல் இன்று ... மேலும் பார்க்க

திரு. மாணிக்கம் படத்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான திரு.மாணிக்கம் படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மை சம்பவத்தைவைத்து எடுக்கப்பட்ட திரு. மாணிக்கம் திரைப்படம் ஒரு அற்புதமான படைப்பு என்று அவர் ப... மேலும் பார்க்க

மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம்!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்று (ஜன.2) மதியம் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.மணிப்பூர் மாநிலத்தின் மலைகள் சூழ்ந்த மாவட்டமான சூராசந்திரப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (ஜன.2) மதி... மேலும் பார்க்க