செய்திகள் :

பாம்பன் பாலம், தனுஷ்கோடி மட்டுமல்ல... ராமேஸ்வரத்தில் பார்க்க இத்தனை இடங்கள் இருக்கா?

post image

தமிழ்நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்று ராமநாதபுரம். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கு உள் மாநிலங்களில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

அங்கு இருக்கும் புனித தலத்திற்கு விஜயம் செய்கின்றனர். ராமநாதபுரத்தில் கோவில்கள் மட்டும்தான் இருக்கிறதா என்று கேட்டால், கடலுக்கு மத்தியில் இருக்கும் பாம்பன் பாலம், ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடம், தனுஷ்கோடி போன்ற பல இடங்கள் இங்கு உள்ளன. ராமநாதபுரத்தில் பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? என்று ஆச்சரியத்துடன் இந்த பதிவை படித்து தெரிந்துக்கொள்வீர்கள்

ராமநாத சுவாமி கோவில்

ஆன்மிகத்தில் பற்று உள்ளவர்களும், சுற்றுலாப் பயணிகளும் நிச்சயம் பார்க்க வேண்டிய கோவில்தான் இந்த ராமநாதசுவாமி கோவில். இந்தக் கோவிலில் 1897 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது.

அக்னி தீர்த்தம்

ராமநாதசுவாமி கோவிலின் கோபுரத்திற்கு முன் 100 மீட்டர் தொலைவில் உள்ள அமைதியான ஆழமற்ற இந்த கடலில் பக்தர்கள் புனித யாத்திரை கொள்கின்றனர். இந்த அக்னி தீர்த்தத்தில் மூழ்கி எழுவது யாத்ரீகர்களின் பாவங்களை நீக்கும் என நம்புகின்றனர். கோவிலைச் சுற்றி உள்ள புனித நீர் தொட்டிகளில் பக்தர்கள் நீராடுகின்றனர். இது ராமேஸ்வரத்தில் முக்கியமான இடமாக கருதப்படுகிறது

பாம்பன் பாலம்

ராமேஸ்வர தீவுக்கும் நிலப்பரப்புக்கும் இடையே உள்ள இந்த பாலம் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. காரணம் தீவை இணைக்கும் இந்த ரயில்வே பாலம் கப்பல்கள் தண்ணீரின் குறுக்கே செல்ல அனுமதிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் புதிதாக மீண்டும் பாலம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தனுஷ்கோடி

தொழில் நகரமாக இருந்த இந்த தனுஷ்கோடி 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலால் கடலில் மூழ்கியது. எஞ்சியுள்ள பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர். தனுஷ்கோடியின் சிறப்பு கடல் சூழ நடுவில் இருக்கும் சாலையில் வாகனங்கள் செல்லும்போது அதன் இயற்கை காட்சி காண்பவரை பிரமிப்பில் ஆழ்த்தும்.

குருசடை தீவு

ராமேஸ்வரம் மண்டபம் பகுதியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் தான் அழகிய குருசடை தீவு அமைந்துள்ளது.

குருசடை தீவு ஏறத்தாழ 66 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துள்ளது. ஒரு நாள் பிக்னிக் செல்ல ஆசை இருந்தால் இந்த இடத்திற்கு தாராளமாக சென்று விட்டு வரலாம்.

சுற்றிலும் கடல், நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பித்து, ஆரவாரமில்லாத அலை ஓசை, தெளிவான நீர், பவளப்பாறைகள், அரிய கடல் உயிரினங்கள், படகு சவாரி என, ஒரு நாள் சுற்றுலாவுக்கு இந்த குருசடை சூப்பர் ஸ்பாட் என்றே சொல்லலாம்.

ஏபிஜே அப்துல் கலாமின் நினைவிடம்

இஸ்ரோவின் விஞ்ஞானியாக பணியாற்றியவர் தான் அப்துல் கலாம். இவர் இந்தியாவின் 16 வது ஜனாதிபதியாக இருந்தார். இவரின் பூர்வீகம் ராமேஸ்வரம். இங்கிருந்து இஸ்ரோ வரை சென்று பணியாற்றதன் காரணமாக இவரை நாடே கொண்டாடியது. ஜூலை 27, 2015 ஆம் ஆண்டு மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்தார். இவரின் அர்ப்பணிப்பை போற்றும் விதமாக இவருக்கு அவரது பிறந்த ஊரில் நினைவிடம் அமைக்கப்பட்டது. அங்கு இவரின் படங்கள், ஓவியங்கள், சிறிய ஏவுகணை மாதிரிகள் போன்றவை உள்ளன.

திரு உத்திரகோசமங்கை கோவில் தீர்த்தம்

உத்திரகோசமங்கை ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு ஒரு பழமையான சிவன் கோவில் உள்ளது. அதாவது மரகதத்தில் செதுக்கப்பட்ட தெய்வம் உள்ளது. ஆண்டுதோறும் டிசம்பரில் நடைபெறும் ஆருத்ரா திருவிழா, ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது.

Travel Contest: கனவு தேசமான அமெரிக்கா நிஜத்தில் எப்படி இருக்கிறது? - ஒரு 'கூல்' ஆன பயண அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மலைமீது எப்படித்தான் செதுக்கினார்களோ! - குடுமியான்மலையில் ஒரு அற்புத அனுபவம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மனிதர்களே இல்லை... பென்குயின்கள் வசிக்கும் தீவுக்கு வரி விதித்த ட்ரம்ப்! - எங்கே தெரியுமா?

பென்குயின்களும், நீர் நாய்களும் வசிக்கும் தீவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அண்டார்ட்டிகா அருகே தெற்கு பெருங்கடலில் உள்ள ஹெர்ட் மற்றும் மெக் டொனால்ட்ஸ் தீவு ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமானதாக உள்ளது.ஆஸ்திர... மேலும் பார்க்க

தனுஷ்கோடியில் இருந்து கச்சத்தீவு வரை ரசிக்க ஓர் சூப்பர் ஸ்பாட்! எங்கே இருக்கிறது தெரியுமா?

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தனுஷ்கோடி ஒரு காலத்தில் தொழில் செய்யும் நகரமாக இருந்தது. அதன் பின்னர் 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலால் அந்த நகரமே கடலில் மூழ்கியது.அதன்பின்னர் அங்கு எஞ்சி இருக்கும் ப... மேலும் பார்க்க

My Vikatan Contest : உங்க டிராவல் அனுபவத்தை பகிருங்க, பரிசுத் தொகையை அள்ளுங்க!

விகடன் வாசகர்களை எழுத்தாளர்களாக்கும் சிறு முயற்சிதான் My Vikatan!யுஜிசி முன்னெடுப்பை அறிமுகப்படுத்தி, எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட படைப்பாளிகளுக்கு களம் அமைத்து கொடுப்பதில் பெருமை கொள்கிறது மை விகடன். ... மேலும் பார்க்க

குற்றாலம் போல குளித்து கொண்டாட மதுரையில் சூப்பர் ஸ்பாட்..! சோழவந்தானில் இப்படி ஓர் அருவியா?

பொதுவாக நீர்வீழ்ச்சி என்றவுடன் குற்றாலம் தான் நினைவிற்கு வரும். தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் செல்ல வேண்டும் என்றல்ல, மதுரைக்கு அருகேயும் ஒரு நீர்வீழ்ச்சி உள்ளது! மதுரைக்கு அருகிலுள்ள சோழ... மேலும் பார்க்க