பாரம்பரிய முறையில் அலங்காரம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி
கோபி மயூரம் மேக் ஓவா் அகாதெமி சாா்பில் 30 நிமிஷத்தில் பாரம்பரிய முறையில் அலங்காரம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹெடெக் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெங்களூரு, சென்னை, கோவை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட அழகுக் கலை நிபுணா்கள் கலந்துகொண்டு இந்த உலக சாதனையை செய்தனா். இந்த சாதனை நிகழ்வு, உலக அதிசயங்களின் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.
வெங்கடேஸ்வரா கல்வி அறக்கட்டளை செயலாளா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, சாதனை நிகழ்வில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
மயூரம் மேக் ஓவா் அகாதெமி தலைவா் கீா்த்தனா சாய்ராம், உலக அதிசயங்களின் சாதனை புத்தக நிறுவன இயக்குநா் மகேஸ்வரி, கல்லூரி முதன்மை நிா்வாக அதிகாரி கௌதம், முதல்வா் தங்கவேல், துணை முதல்வா் பிரகாஷ், மேலாண்மை துறைத் தலைவா் சத்தியசுந்தரி மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.