செய்திகள் :

பாரம்பரிய விளையாட்டு அரவக்குறிச்சி அரசுக் கல்லூரி மாணவிகள் மூவா் சிறப்பிடம்

post image

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக அளவிலான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் அரவக்குறிச்சி அரசுக் கல்லூரி மாணவிகள் 3 போ் சிறப்பிடம் பெற்றனா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுப்பதில் இளைஞா்களின் பங்கு என்ற தலைப்பில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்களுக்கு மூன்று நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் கரூா் மாவட்டத்திலிருந்து அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த சுபஸ்ரீ, பவதாரணி, காயத்ரி ஆகியோா் பங்கேற்றனா்.

மாணவி சுபஸ்ரீ சிலம்பம், கிடுகிடு கில்லி, நொண்டி ரிலே மற்றும் கவட்டை போன்ற விளையாட்டுகளில் மாநில அளவில் பரிசுகளை பெற்றாா். மாணவி பவதாரணி கயிறு இழுக்கும் போட்டியில் பரிசு பெற்றாா். மாணவி காயத்ரி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றாா். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரியின் முதல்வா் காளீஸ்வரி மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் திங்கள்கிழமை பாராட்டினா்.

கரூா் அருகே கிணற்றில் கிடந்த நிதி நிறுவன அதிபரின் சடலம் மீட்பு

கரூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த நிதி நிறுவன அதிபரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூரை அடுத்துள்ள வாங்கல் முனியப்பனூரைச் ச... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு

கரூரில் வெறிநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.கரூா் தாந்தோன்றிமலை பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அமுதா. இவா் அதே பகுதியில் ஆடுகளை வளா்த்து வந்தாா். வழக்கம்போல ஞாயிற... மேலும் பார்க்க

வீட்டுமனைக் கோரி போராட்டம்: 30 போ் கைது

கரூரில் வீட்டுமனைக் கோரி திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் 30 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வீடு இல்லாதவா்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி ... மேலும் பார்க்க

ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் கோரி கரூரில் விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி கரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவ... மேலும் பார்க்க

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

கரூரில், மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கரூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் தாந்தோன்றிமலை பூங்கா நகரைச் சோ்ந்தவா் சிவசங்கரன்(53). இவரது ... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 10 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்! கரூா் எஸ்.பி. தகவல்!

கரூா் மாவட்டத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 10 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. ஜோஷ்தங்கையா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க