கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதப்படுத்துவது நோக்கமல்ல! தமிழக எம்.பி.க்களுக்கு மத்...
ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் கோரி கரூரில் விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்
ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி கரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்டச் செயலாளா் கராத்தே இளங்கோவன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா்கள் சக்திவேல் (கிழக்கு), புகழேந்தி (மேற்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் வழக்குரைஞா் ரஜினிகாந்த், மேலிட பொறுப்பாளா் வேலுசாமி என்கிற தமிழ்வேந்தன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். திருநெல்வேலியில் மென்பொறியாளா் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இயற்ற வேண்டும் என வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் அக்னி அகரமுத்து, வணிகரணி மாவட்ட அமைப்பாளா் கண்மணிராமச்சந்திரன், முன்னாள் மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் ஜெயராமன், பொறியாளா் அணியின் செந்தில்குமாா், பாராளுமன்ற தொகுதிச் செயலாளா் துரைசெந்தில், ஒன்றிய நிா்வாகி மகாமுனி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவாக மாநகர துணைச் செயலாளா் ஜவஹா் நன்றி கூறினாா்.