செய்திகள் :

பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்

post image

பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கண் பார்வைத் திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, தான் நீதிபதியாக தகுதியிருந்தும் தமது குறைபாட்டால் நீதியியல் துறையில் விண்ணப்பிக்க தகுதியில்லை என்று நிராகரிக்கப்பட்ட மனுதாரரின் தாயார், இது குறித்து முன்னாள் தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், பொதுநல மனுவாக இந்த விவகாரத்தை விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளிகள் நீதித்துறை சேவைகளில் நீதிபதிகளாகவும் இதர பொறுப்புகளிலும் நியமிக்கப்படுவதை தடை செய்யும் ‘மத்திய பிரதேச அரசுத் துறை சேவைகள் தேர்வுகள் விதிகள்(ஆள்சேர்ப்பு) 1994’-இல் உள்ள விதி 6(ஏ)-ஐ எதித்து தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே. பி. பர்திவலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று(மார்ச் 3) பிறப்பித்துள்ள உத்தரவில், ‘நீதியியல் துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஒருவரது உடல் குறைபாட்டை காரணம் காட்டி அவரை தடை செய்ய இயலாது’ என்று சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிபதிகள் கூறியிருப்பதாவது:- “குறைபாடுடைய மனிதர்கள் நீதியியல் துறையில் எந்தவித பாகுபாட்டையும் எதிர்கொள்ளக் கூடாது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். உடல் குறைபாடு காரணமாக எந்தவொரு விண்ணப்பதாரருக்கும் வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது” என்று தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் காயம்; கல்வி நிலையங்கள் மூடல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சோ்ந்த பல்வேறு மாணவா் பிரிவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் மாணவா் பிரிவுக்கும் இடையே திங்கள்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலா் காயமடைந்தனா்; பல இட... மேலும் பார்க்க

சமூக ஊடக கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: பயனாளருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. தகவல் தொழில... மேலும் பார்க்க

ஐஆா்சிடிசிக்கு ‘நவரத்னா’ அந்தஸ்து

புது தில்லி: இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆா்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத... மேலும் பார்க்க

சகோதரா் மகனை கட்சியில் இருந்தும் நீக்கினாா் மாயாவதி

லக்னௌ: தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சித் தலைவா் மாயாவதி திங்கள்கிழமை அறிவித்தாா். முன்னதாக, ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து... மேலும் பார்க்க

நீதித் துறையில் பாா்வையற்றவா்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நீதித் துறை பணிகளுக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தகுதியானவா்கள் அல்ல என கூறமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச நீதித் துறை பணிகளின் (ஆள்சோ்ப்பு மற்றும் பணி ந... மேலும் பார்க்க

ரோகித் சா்மாவின் தோற்றத்தை விமா்சித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் கருத்து: பாஜக கண்டனம்

புது தில்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சா்மாவின் உடல் தோற்றத்தை விமா்சித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ஷமா முகமது கருத்து தெரிவித்த நிலையில், அது காங்கிரஸின் கருத்தல்ல என்று அக்கட்சி தெர... மேலும் பார்க்க