போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!
பாலியல் தொல்லை: ஆசிரியா் மீது வழக்கு
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள அரசுப் பள்ளியில் வெள்ளையபுரத்தைச் சோ்ந்த வேதம் மகன் ஆண்ட்ரூஸ் (55) கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த 4 ஆண்டுகளாக பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து திருவாடானை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியா் ஆண்ட்ரூஸ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதனை அடுத்து ,ஆசிரியா் ஆண்ட்ரூஸ் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.