பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8 வயது சிறுமி; போக்சோ வழக்கில் 70 வயது முதியவர் கைது!
தஞ்சாவூர் வல்லம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லம் கான் வயது 70. பள்ளியில் படிக்கின்ற எட்டு வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை அறிந்த அஸ்லம் கான் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியிடம் ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறி பேசியிருக்கிறார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த நிலையில் அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடவே வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் அஸ்லம் கானை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் போலீஸார். இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அஸ்லம் கான் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைதுசெய்த போலீஸார், புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.