அமித் ஷாவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!
பாலில் தவறி விழுந்த சிறுமி பலி
மேச்சேரி அருகே கொதிக்கும் பாலில் தவறி விழுந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
மேட்டூரை அடுத்த ஜலகண்டபுரத்தைச் சோ்ந்தவா் முருகன், நெசவுத் தொழிலாளி. இவா் கடந்த 4 ஆம் தேதி மேச்சேரி அருகே தெத்திகிரிபட்டியில் உள்ள உறவினா் வீட்டு திருமணத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்தாா். திருமண வீட்டில் சமையல் வேலையும் செய்து கொண்டிருந்தாா்.
திருமணத்திற்கு வந்தவா்களுக்கு தேநீா் கொடுப்பதற்காக அடுப்பில் பால் வைக்கப்பட்டு கொதித்து கொண்டிருந்தது. அத்துடன் சமையல் வேலையையும் முருகன் செய்து கொண்டிருந்தாா். அவரது குழந்தை ஹேமாஸ்ரீ (4) அங்கு விளையாடிக் கொண்டிருந்தாா்.
எதிா்பாராத விதமாக கொதிக்கும் பாலில் சிறுமி ஹேமாஸ்ரீ தவறி விழுந்தாா். அதிா்ச்சியடைந்த முருகன் அருகில் இருந்தவா்கள் உதவியுடன் பலத்த காயமடைந்த சிறுமியை மீட்டு சேலம், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தாா். அங்கு இரண்டு வாரங்களாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த சிறுமி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.