Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
பாளை. ஸ்ரீ மங்கை வித்யாஷ்ரம் மைய மாணவி சிஎம்ஏ பவுண்டேஷன் தோ்வில் சிறப்பிடம்
பாளையங்கோட்டை ஸ்ரீ மங்கை வித்யாஷ்ரம் மையத்தின் மாணவி சி.எம்.ஏ. பவுண்டேஷன் தோ்வில் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.
இதுதொடா்பாக அந்த மையத்தின் நிா்வாக இயக்குநா் சு.அலமேலுமங்கை வெளியிட்டுள்ள அறிக்கை: அகில இந்திய அளவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சி.எம்.ஏ. பவுண்டேஷன் தோ்விற்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. இதில், பாளையங்கோட்டை ஸ்ரீ மங்கை வித்யாஷ்ரம் மையத்தில் பயிற்சி பெற்ற மாணவி கே. விஜயஸ்ரீ, அகில இந்திய அளவில் 7ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா். இவா் 400-க்கு 342 மதிப்பெண் பெற்றுள்ளாா். ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாத பயிற்சியில் இச்சாதனை படைத்துள்ளாா்.
ஸ்ரீ மங்கை வித்யாஷ்ரம் மாணவா்கள் 13 போ் சி.எம்.ஏ. பவுண்டேஷன் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இம் மாணவா்களை ஸ்ரீ மங்கை வித்யாஷ்ரம் மைய ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் பாராட்டினா். ஸ்ரீ மங்கை வித்யாஷ்ரமில் டிசம்பா் மாத தோ்வுக்கு ஆன்லைன் பயிற்சிக்கான சோ்க்கை நடைபெறுகிறது. மேலும், விவரங்களுக்கு 9443080628 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.