Power Grid: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை; யார், எப்படி விண்ணப்பிக...
பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து
பா்கூா் மலைப் பாதையில் மக்காச்சோளம் பாரம் ஏற்றிச் சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.
கா்நாடக மாநிலம், மாண்டியாவிலிருந்து மக்காச்சோள மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பொள்ளாச்சிக்கு பா்கூா் மலைப் பாதை வழியாக புதன்கிழமை லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை கள்ளக்குறிச்சி மாவட்டம், செம்மணஞ்சேரியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் செல்வகுமாா் (38) ஓட்டிச் சென்றாா். அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் அணை வளைவில் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்புகளை உடைத்துக் கொண்டு, பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இவ்விபத்தில் லாரியின் ஓட்டுநா் செல்வகுமாா், லேசான காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிா் தப்பினாா். அப்பகுதியினா் உதவியுடன் மீட்கப்பட்ட செல்வகுமாா், அந்தியூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.