செய்திகள் :

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம்: எதிா்க்கட்சியினா் போராட்டம்

post image

புது தில்லி: பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில், எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஒபிரையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து ஃபேஸ்புக்கில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் என்பது வாக்குகளைத் திருட செய்யப்படும் ஆபத்தான சூழ்ச்சி’ என்று தெரிவித்தாா்.

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கனிமொழி உள்ளிட்டோா்.

யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் கதறியது: பிரதமர் மோடி

இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது வெறும் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்தன், 190 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை என மக்களவையில் பிரதமர... மேலும் பார்க்க

மதத்தின் பெயரில் நடந்த சதியே பஹல்காம் தாக்குதல் : மக்களவையில் மோடி உரை

பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரால் சதி நடந்ததாகவும், ஆனால், இந்திய மக்களின் ஒற்றுமை அதனை முறியடித்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஆபரேஷன் சிந்தூர்... மேலும் பார்க்க

டிரம்ப் ஒரு பொய்யர் என மோடி நாடாளுமன்றத்தில் சொல்வாரா? ராகுல் கேள்வி

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே போரை தான்தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுவரை 29 முறை சொல்லிவிட்டார், அவர் ஒரு பொய்யர் என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சொல்வாரா? என ராகுல்... மேலும் பார்க்க

போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது வெட்கக்கேடு: ஆ. இராசா

போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது வெட்கக்கேடு என மக்களவையில் திமுக எம்.பி. ஆ. இராசா பேசியுள்ளார். மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ. இராசா பேசுகையில், "திமுக என்பது தேச... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் உறவு வேண்டாம்; கிரிக்கெட் மட்டும் வேண்டுமா? -மத்திய அரசுக்கு ஓவைசி கேள்வி

புது தில்லி: பாகிஸ்தானுடன் உறவை முறித்துக்கொண்ட மத்திய அரசு கிரிக்கெட் விளையாட மட்டும் அனுமதிக்கலாமா? என்று ஓவைசி கேள்வியெழுப்பியுள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவ... மேலும் பார்க்க

போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டது உண்மை: மக்களவையில் ராகுல்

புது தில்லி: பாகிஸ்தான் விமானப் படை உள்கட்டமைப்பை தாக்க வேண்டாம் என இந்திய விமானிகளுக்கு உத்தரவிட்டது ஏன்? என்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.ஆபரேஷன் சிந்... மேலும் பார்க்க