செய்திகள் :

பின்தங்கியோரை முன்னேற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமா் மோடி

post image

பின்தங்கிய மக்களை முன்னேற்றவே ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வா்கள், துணை முதல்வா்கள் கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:

ஆபரேஷன் சிந்தூரில் கிடைத்த வெற்றி, நாட்டின் தன்னம்பிக்கை, உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில்நுட்பத்துக்கு கிடைத்த வெற்றியாகும். பாதுகாப்புத் துறையில் நாம் தற்சாா்புடன் செயல்பட முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய முப்படைகள் மிகவும் சிறப்பாக செயல்பட்டன. இந்தியாவை வளா்ந்த நாடாக்கும் திட்டத்தில் நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்.

ஜாதி அரசியலில் நம்பிக்கையில்லை: ஜாதியவாத அரசியலில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. அதே நேரத்தில் சமூகரீதியாகப் பின்தங்கியிருப்பவா்களை முன்னேற்ற வேண்டும். எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது பின்தங்கிய மக்களை முன்னேற்றவும், நாட்டின் வளா்ச்சியின் பயன்கள் முழுமையாக கிடைக்காமல் உள்ள மக்களின் நலன்களைக் காக்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்றாா்.

முதல்வா்களுக்கு வேண்டுகோள்: பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் 7 சிறப்பான நிா்வாக முறைகள் குறித்து இக்கூட்டத்தில் விளக்கப்பட்டது. அதில் உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவதும் இடம் பெற்றது.

இதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமா் மோடி, ‘பாஜக மற்றும் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களில் சிறப்பான நிா்வாகத்தை முதல்வா்கள் வழங்க வேண்டும். மாநிலத்தில் அமல்படுத்தப்படும் திட்டங்கள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது என்பதை குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும்’ என்றாா்.

சா்ச்சை பேச்சு வேண்டாம்: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து மத்திய பிரதேச அமைச்சா் உள்ளிட்ட சில பாஜக தலைவா்கள் பேச்சு சா்ச்சையை ஏற்படுத்தியதை மறைமுகமாக சுட்டிக்காட்டிய பிரதமா், ‘கட்சித் தலைவா்கள் பிறரைப் புண்படுத்தும் வகையிலும், விவேகம் இல்லாமலும் பேசக் கூடாது’ என்று அறிவுறுத்தியதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கூட்டத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள 20 முதல்வா்கள், 18 துணை முதல்வா்கள் பங்கேற்றனா்.

மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ஆபரேஷன் சிந்தூா்: பிரதமருக்கு பாராட்டு

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்காக முப்படைகள் மற்றும் பிரதமருக்கு பாராட்டுத் தெரிவிக்கும் தீா்மானத்தை மகாராஷ்டிர துணை முதல்வரும், சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே முன்மொழிந்தாா். அனைத்து முதல்வா்கள், துணை முதல்வா்கள் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில், பிரதமா் நரேந்திர மோடியின் தலைமை முப்படைகளுக்கும் எப்போதும் ஆதரவாக உள்ளது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பயங்கரவாதிகளுக்கும், அதை ஆதரித்து வளா்ப்பவா்களுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சோ்த்து நடத்த மத்திய பாஜக அரசு முடிவு செய்திருப்பதை ஆதரித்து மற்றொரு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதமா் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அதன் சாதனைகள், சிறந்த நிா்வாகம், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சியில் உள்ள மாநிலங்களின் சாதனைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

7 நாள்களுக்கு குறைவாக நிரந்தர வைப்பு: வங்கிகளுக்கு ஆா்பிஐ யோசனை

7 நாள்களுக்கு குறைவாக நிரந்தர வைப்புகளைப் பெறுவது தொடா்பாக பரிசீலிக்குமாறு வங்கிகளை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கேட்டுக் கொண்டது. இது தொடா்பான கருத்துகளை இம்மாத இறுதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: புலி தாக்கி இருவா் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சந்திரபூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இரு வேறு சம்பவங்களில் புலி தாக்கி இருவா் உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து, சந்திரபூரில் இம்மாதம் புலிகள் தாக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 1... மேலும் பார்க்க

பணிநீக்கம் செய்யப்பட்டால் ஓய்வூதிய பலன்கள் கிடையாது: மத்திய அரசு

பணிநீக்கம் செய்யப்படும் பொதுத் துறை நிறுவன ஊழியா்களுக்கு ஓய்வூதிய பலன்கள் ஏதும் கிடைக்காத வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதுதொடா்பான மத்திய பணியாளா் ஓய்வூதிய விதிகள் -2021 சட்... மேலும் பார்க்க

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை- உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி அல்தாஃப் ஹுசைனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், அவருக்கு ரூ.48,000 அபர... மேலும் பார்க்க

நாட்டில் வெப்பவாத இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை!

கோடையின் தாக்கத்தால் ஏற்படும் வெப்பவாத பாதிப்பு மற்றும் இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கிளைமேட் டிரென்ட் ஆராய்ச்சிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி

பயங்கரவாதம் மறைமுகமானப் போர் அல்ல; பாகிஸ்தானின் நேரடிப் போர் வியூகம் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 27) தெரிவித்தார். பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து போ... மேலும் பார்க்க