பிப்.14-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
கடலூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.14) நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.14) நடைபெற உள்ளது.
முகாமில், 15-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளா்களை தோ்வு செய்து, பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.