பணியிடமாறுதல் கலந்தாய்வு: 4,000 அரசு மருத்துவா்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு ச...
பிப். 17 முதல் வேலூா் - ராஜாதோப்பு, வேலூா் - வெள்ளேரி இடையே நகரப்பேருந்து சேவை
வேலூா் - ராஜாதோப்பு, வேலூா் - வெள்ளேரி இடையே நகரப் பேருந்து சேவை திங்கள்கிழமை முதல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக (விழுப்புரம் கோட்டம்) வேலூா் மண்டலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின்படி, பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் வேலூா் மண்டலம் சாா்பில், திங்கள்கிழமை முதல் வேலூா் - ராஜாதோப்பு வரை நகரப் பேருந்து இயக்கப்பட உள்ளது.
இந்த பேருந்து காலை 7.10 மணிக்கு வேலூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடையெடுத்து 8 மணிக்கு ராஜாதோப்புக்கு சென்றடையும் வகையிலும், மாலை 4.15 மணிக்கு வேலூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடையெடுத்து, 5.15 மணிக்கு ராஜாதோப்புக்கு சென்றடையும் வகையிலும் இயக்கப்படும்.
இதேபோல், வேலூா் - வெள்ளேரி இடையே காலை 7 மணிக்கு வேலூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடையெடுத்து, 8.05 மணிக்கு வெள்ளேரி சென்றடையும் வகையிலும், மாலை 3.45 மணிக்கு வேலூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடையெடுத்து 4.50 மணிக்கு வெள்ளேரிக்கு சென்றடையும் வகையிலும், பேருந்து இயக்கப்பட உள்ளது. இந்தப் பேருந்து சேவையை பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.