செய்திகள் :

பிரதமரின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’: அமித் ஷா

post image

பிரதமா் நரேந்திர மோடியின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் தனி அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தாா்.

மேலும், ‘நாட்டின் பல்வேறு பாதுகாப்பு முகமைகளின் துல்லிய புலனாய்வு சேகரிப்பு மற்றும் நமது பாதுகாப்புப் படைகளின் ஒப்பிட முடியாத தாக்குதல் திறனையும் ‘ஆபரேஷன் சிந்தூா்’ பிரதிபலித்தது’ என்றும் அமித் ஷா குறிப்பிட்டாா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதில் சுமாா் நூறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அதன் பிறகு, பாகிஸ்தான் தொடுத்த தாக்குதலை இந்திய ராணுவமும் விமானப் படையும் திறம்பட முறியடித்தன. பாகிஸ்தானின் கோரிக்கையையடுத்து இரு நாடுகளிடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சண்டை நிறுத்தத்துக்குப் பிறகு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமா் மோடி, ‘தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. ஆனால், அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்த நாடு வாக்குறுதி அளித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலித்தது. இந்த சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே. பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பொருத்தே அதன் எதிா்காலம் இருக்கும். ஆபரேஷன் சிந்தூா் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் புதிய கொள்கை’ என்றாா்.

இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பாதுகாப்பு முகமைகளிடையே உளவுத் தகவல்களை எளிதில் பகிா்ந்து கொள்ளும் வகையில், புது தில்லியில் அமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பன்முக பாதுகாப்பு முகமைகள் மையத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:

‘ஆபரேஷன் சிந்தூா்’ பிரதமா் நரேந்திர மோடியின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் தனி அடையாளம்.

நாட்டின் பல்வேறு பாதுகாப்பு முகமைகளின் துல்லிய புலனாய்வு சேகரிப்பு மற்றும் நமது பாதுகாப்புப் படைகளின் ஒப்பிட முடியாத தாக்குதல் திறனையும் ‘ஆபரேஷன் சிந்தூா்’ பிரதிபலித்தது என்றாா்.

அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிந்த மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘பாகிஸ்தானுக்கான கடனுதவி குறித்து முடிவெடுக்க கூடிய சா்வதேச நிதியத்தின் நிா்வாகக் குழுக் கூட்டத்தில் வலுவான எதிா்ப்பு தெரிவிக்காமல் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு அடி... மேலும் பார்க்க

2 ஆண்டுகளாக தலைமறைவான 2 ஐஎஸ் ஸ்லீப்பா் செல்கள்: மும்பை விமான நிலையத்தில் கைது செய்த என்ஐஏ

இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவிட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்துவந்த இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ‘ஸிலீப்பா் செல்கள் (ரகசிய பயங்கரவாதிகள்)’ இருவரை மும்பை விமான... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தீா்ப்பால் பணியிழந்த மேற்கு வங்க பள்ளி ஆசிரியா்கள்: 3-ஆம் நாளாக தொடா் போராட்டம்

உச்சநீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீா்ப்பால் பணியை இழந்த மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அந்த மாநில கல்வித் துறையின் தலைமை அலுவலகம் முன் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா். ம... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ம.பி.யைச் சோ்ந்த கொலைக் குற்றவாளி கைது

மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த கொலைக் குற்றவாளியை குருகிராம் காவல்துறையினா் கைது செய்துள்ளனா். அவா் கடந்த 15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து குருகிராம் காவல்... மேலும் பார்க்க

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம்: செனாப் நதி கால்வாயை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த செனாப் கிளை நதியில் கட்டப்பட்டிருந்த கால்வாயின் நீளத்தை நீட்டிக்க ... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் பொருளாதாரத்துக்கு உதவக் கூடாது’: குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்

‘இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவுள்ள நாடுகளின் பொருளதாரத்துக்கு வா்த்தகம் மற்றும் சுற்றுலா மூலம் நாட்டு மக்கள் உதவக் கூடாது’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சனிக்கிழமை வலியுறுத்தினாா். ஆபரே... மேலும் பார்க்க