வெள்ள நீரை மக்கள் சேமிக்கலாமே.. யோசனை சொல்லும் பாகிஸ்தான் அமைச்சர்!
பிரதமர் மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்ற கார்; ஹோங்க்சி L5; 1966 டிசைன் -கவனம் ஈர்க்க காரணம் என்ன?
சமீபத்திய SCO மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் ஹோங்க்சி L5 மாடல் காரில் பயணம் செய்தது பேசுபொருளாகி கவனம் ஈர்த்துள்ளது.
இந்தக் கார் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் உயர்மட்ட தலைவர்கள் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ அரசு வாகனமாகும். சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு தலைவர்கள், சீனாவுக்குச் செல்லும் போது இந்தக் காரில் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஹோங்க்சி L5 (Hongqi L5), சீனாவின் மிகச் சிறந்த செடான் ஆடம்பரக் கார் எனக் கருதப்படுகிறது. 'ஹோங்க்சி' என்பது சீன மொழியில் “சிகப்பு கொடி” என்று பொருள். இந்தக் கார், சீனாவின் பழமை வாய்ந்த FAW குழுமத்தின் பிராண்டாகும்.
1966 விண்டேஜ் டிசைன் – 2023 ஹைடெக்
2014ஆம் ஆண்டு அறிமுகமான ஹோங்க்சி L5, 1966ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட CA770 மாடல் விண்டேஜ் காரின் டிசைனில் உருவாக்கப்பட்டது. வட்டமான ஹெட்லைட்கள், பெரிய க்ரோம் கிரில், ஹூடில் சிவப்பு கொடி வடிவம் போன்ற அம்சங்கள், சீனாவின் பாரம்பரியத்தையும் அதிகாரத்தையும் கம்பீரமாக வெளிப்படுத்துகின்றன.
ரஷ்யாவிற்கு ரோல்ஸ்-ராய்ஸ் என்றால், சீனாவிற்கு ஹோங்க்சி.

1966ஆம் ஆண்டு அறிமுகமான CA770 மாடல் காரின் டிசைனை அப்படியே பாரம்பரிய டிசைனாகக் கொண்டு, உயர் மட்ட பாதுகாப்புடன், உலகை மிஞ்சும் ஹைடெக் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது ஹோங்க்சி L5.
சொகுசாக உட்காரும் வசதி கொண்ட, 6 மீட்டர் நீளமுள்ள செடான். உட்கட்டமைப்புகள் அனைத்தும் கைகளால் துல்லியமாக செய்யப்பட்டவை. கம்பீரமாகவும் மிடுக்காகவும் சாலையில் பறக்கும் இதன் இன்ஜின் 4.0 லிட்டர் டர்போ V8.
இதன் விலை 7.18 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய்).
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs