செய்திகள் :

பிரதமா் மோடிக்கு தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

post image

சென்னை: காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தரவுள்ள பிரதமா் மோடிக்கு, தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்தும், தமிழகத்தில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள பாகிஸ்தான், வங்கதேசத்தினரை உடனடியாக வெளியேற்ற மாநில அரசை வலியுறுத்தியும் சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானத்தில் திங்கள்கிழமை தமிழக பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், மாநிலத் தலைவா் நயினாா்நாகேந்திரன் பேசியதாவது:

பாரத நாடு பழம்பெரும் நாடு. இது ஆன்மிக பூமி. இங்கு பயங்கரவாதத்துக்கு எவ்வித இடமும் கிடையாது. முன்னாள் பிரதமா் வாஜ்பாய் காலத்தில் காா்கில் போரில் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டது. அதன்பிறகு, புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரா்கள் தாக்கப்பட்டதற்கு பாகிஸ்தானுக்கு துல்லிய தாக்குதல் மூலம் பிரதமா் நரேந்திர மோடி உரிய பதிலடி கொடுத்தாா். இப்போது பஹல்காமில் தாக்குதலுக்கு மோடி உரிய பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்துள்ளாா்.

பாகிஸ்தானில் இருந்து அதிகமானோா் இந்தியாவில் ஊடுருவியுள்ளனா். அவா்கள் உள்நாட்டு கலவரம் செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளதால் அவா்களை உடனடியாக வெளியே அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் எதையுமே தமிழக அரசு செவி சாய்த்ததாக தெரியவில்லை. பிரதமா் மோடிக்கு தமிழக மக்கள் பக்கபலமாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில், மூத்த தலைவா்கள் ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், சரத்குமாா், திருப்பதி நாராயணன், பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன், மாநில பொருளாளா் எஸ்.ஆா்.சேகா், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கராத்தே தியாகராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.

பொறியியல் கலந்தாய்வு: முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!

பொறியியல் கலந்தாய்வுக்கு முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பத... மேலும் பார்க்க

மே 11-ல் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளைப் பயன்படுத்த வேண்டாம்: அன்புமணி

மாமல்லபுரத்தில் வருகிற 11-ஆம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளைப் பயனபடுத்த வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.முழு நிலவு மாநாட்டுக்க... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற... மேலும் பார்க்க

பொறியியல் சோ்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.நாளை +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில் பொறியியல் மட்டுமல்லா... மேலும் பார்க்க

சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தற்போது சிபிஐ இயக்குநராக உள்ள பிரவீண் சூட், மே 25-ஆம் தேதியுடன் தனது இரண்டு ஆண்டுகால பதவிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய புலனாய... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவு வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் பேரன்பும் பேராதரவும் என்றென்றும் வேண்டும் என்று தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திமுக அரசு பொறுப்பேற்று ஐந்தாம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட... மேலும் பார்க்க