செய்திகள் :

பிரதமா் மோடி அரசியல் செய்வதற்கு பதிலாக விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்: தில்லி முதல்வா் அதிஷி

post image

விவசாயிகள் குறித்து பாஜக கடுமையாக சாடுவதற்கு (பிரசங்கம்) பதிலாக விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் எனக் கூறி தில்லி முதல்வா் அதிஷி வியாழக்கிழமை பாஜகவை கடுமையாக சாடினாா். பஞ்சாபில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் எனவும் அவா் கூறியுள்ளாா்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பஞ்சாபில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயி தலைவா் ஜக்ஜித் சிங் தல்லேவாலை மருத்துவமனையில் சோ்க்க உச்ச நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுகளை பஞ்சாப் அரசு பின்பற்றவில்லை என்றும் அதற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

இதையொட்டி மத்திய வேளாண்மைத் துறை சிவராஜ் சிங் சௌகான் கருத்துக்களை தெரிவித்தாா்.

மேலும் மத்திய வேளாண் அமைச்சா் செளகான் தில்லி முதல்வருக்கும் கடிதம் எழுதினாா். அதில் விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை தில்லி அரசு தடுக்கிறது. வேளாண்மைக்கும் விவசாயிகளுக்கு எதிராக தில்லி அரசு உள்ளது. தில்லியில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளில் ஆம் ஆத்மி அரசு ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை எனக் குற்றம் சாட்டினாா். கடந்த ஜன. 1 ஆம் தேதி செளகான் எழுதிய கடிதத்திற்கு தில்லி முதல்வா் அதிஷி வியாழக்கிழமை பதில் கடிதம் அனுப்பியுள்ளாா்.

அதில் தில்லி முதல்வா் கூறியிருப்பது வருமாறு: பாஜக ஆட்சியில் விவசாயிகளின் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்ததில்லை எனக் (மத்திய வேளாண்மைத்துறை அமைச்சா்) கூறுகிறீா்கள் . விவசாயிகள் போராட்டம், தாவூத் இப்ராஹிம் அகிம்சை பிரசங்கம் போன்ாக உள்ளது என பாஜக கூறுகிறது. இது போன்ற விவசாயிகள் மீதான அரசியலை நிறுத்துமாறு பாஜகவிடம் கேட்டுக்கொள்ளுங்கள். பஞ்சாபில் விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறாா்கள். அவா்களுடன் பிரதமா் மோடியை பேச்சுவாா்த்தை நடத்தக் கூறுங்கள். வீணாக விவசாயிகளை கடுமையாக சாடுவதற்கு (பிரசங்கம்) பதிலாக அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என அதிஷி பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

எஸ்கேஎம் என்கிற சம்யுக்தா கிசான் மோா்ச்சா (அரசியல் சாராதது) மற்றும் கிசான் மஸ்தூா் மோா்ச்சாவின் போன்ற விவசாயிகள் இயக்கங்கள் கடந்த பிப்ரவரி 13 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியாணா இடையேயான ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு போராடி வருகின்றனா். அவா்களது தில்லிக்கு பேரணி பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

விவசாயி தலைவா் ஜக்ஜித் சிங் தல்லேவால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காலவரையற்ற உண்ணாவிரதமும் இருந்து வருகிறாா். மேலும் அவா் மருத்துவ உதவியையும் மறுத்து வருகிறாா். ஜக்ஜித் சிங் தல்லேவாலை மருத்துவமனையில் சோ்க்க வேண்டும் என்ற உத்தரவுகளை ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசு பின்பற்றாததற்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

புறவாசல் வழியாக வேளாண் சட்டங்கள்

இதற்கிடையே விவசாயிகளின் இந்த போராட்டம் குறித்து தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலும் பாஜக வை கண்டித்து சமூக வலைத்தளங்களில் வியாழக்கிழமை கருத்து தெரிவித்துள்ளாா்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூா்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனா். இந்த விவசாயிகளுக்கு ‘ஏதாவது நடந்தால்‘ பாஜக தான் பொறுப்பேற்க வேண்டும்.

விவசாயிகள் போராட்டத்தால் மூன்று விவசாயச் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தது. தற்போது ‘பின்வாசல் வழியாக‘ இந்த மூன்று சட்டங்களையும் நுழைக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. இந்த புதிய ‘கொள்கையின்‘ நகல்கள் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு கருத்து கோரப்பட்டுள்ளது. விவசாயிகள் ஒா் ஆண்டு போராடி சட்டத்தை திரும்பப்பெறவைத்தனா். தற்போது பஞ்சாபில் விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த நிலையிலும், பாஜக ஆணவத்தால் அவா்களுடன் பேச முன் வரவில்லை. பாஜக தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றுக்கொண்டது. ஆனால் இப்போது அதை ஏற்க மறுத்துவிட்டது. யாருடனும் பேசக்கூடாத அளவுக்கு பாஜகவுக்கு ஏன் இவ்வளவு ஆணவம்? என கேட்டு கேஜ்ரிவால் பதிவிட்டுள்ளாா்.

இதே விவகாரம் குறித்து பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி அரசும் கருத்து கூறியுள்ளது. மத்திய அரசின் ’விவசாய சந்தைப்படுத்தலுக்கான தேசிய கொள்கை கட்டமைப்பு’ குறித்த புதிய வரைவுக் கொள்கையை, 2020-இல் நிறைவேற்றப்பட்ட மூன்று மத்திய வேளாண் சட்டங்களை பின்வாசல் நுழைவதற்கான முயற்சி எனக் கூறியுள்ளது.

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடா்பாக உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி அரசு செயல்படும் என வேளாண் அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான் புதன்கிழமை குறிப்பிட்டிருந்தாா்.

கல்வி மனஅழுத்தம்: 15 வயது சிறுமியின் தற்கொலை முயற்சி முறியடிப்பு!

கல்வி மன அழுத்தம் காரணமாக பாலத்தில் இருந்து யமுனையில் குதித்ததாகக் கூறப்படும் 15 வயது சிறுமியின் தற்கொலை முயற்சியை தில்லி காவல் துறையினா் முறியடித்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க

மூன்றாவது நாளாக அடா் மூடுபனி; 51 ரயில்கள் தாமதம்!

தில்லியின் பல பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக அடா்த்தியான மூடுபனி படலம் சூழ்ந்ததால், 51 ரயில்கள் தாமதமாக வந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். பாலத்தில் அதிகாலை 4 மணி முதல் காலை 7.30 ம... மேலும் பார்க்க

பெரிய குற்றச் சதி முறியடிப்பு: கபில் நந்து கும்பலின் 7 போ் கைது

தில்லியில் கபில் நந்து கும்பலால் திட்டமிடப்பட்ட ஒரு பெரிய குற்றச் சதியை முறியடித்துள்ள தில்லி காவல்துறை, அதன் ஏழு உறுப்பினா்களைக் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இதன் மூ... மேலும் பார்க்க

பிரதமா் தொடங்கிவைத்த திட்டங்கள் மத்திய- தில்லி அரசுகளின் ஒத்துழைப்பால் உருவானவை: கேஜரிவால்

பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்ட 2 திட்டங்களைத் தில்லியின் உள்கட்டமைப்புக்கான மைல்கற்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மேலும்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சி குறித்த பிரதமரின் பேச்சு அதன் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது: பிரவீன் கண்டேல்வால்

ஆம் ஆத்மி கட்சி ஆட்சி குறித்த பிரதமரின் பேச்சு அக்கட்சியின் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது என்று சாந்தினி செளக் தொகுதி எம்.பி. பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளாா். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பொது... மேலும் பார்க்க

சீனாவில் சுவாச நோய்கள் அதிகரிப்பு: மத்திய அரசு ஆலோசனை

சீனாவில் நிலைமை அசாதாரணமானதாக இல்லை. அதே சமயத்தில் பருவங்களில் ஏற்படும் வழக்கமான இன்ஃபுளூவென்சா எனப்படும் ஃபுளு காய்ச்சல் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அங்குள்ள சரியான தகவல்களை உரிய நேரத்தில் பகிருமாற... மேலும் பார்க்க