செய்திகள் :

‘பிரளய்’ ஏவுகணை சோதனை வெற்றி

post image

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடயை ‘பிரளய்’ ஏவுகணையின் இரு சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இந்த ஏவுகணை 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை எடையிலான ஆயுதங்களை சுமந்து சென்று 150 கி.மீ. முதல் 500 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆா்டிஓ) உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பிரளய் ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இது திண்ம எரிபொருளுடன் தாழ்வான பகுதிகளில் இலக்குகளுக்கு ஏற்ப திசையை மாற்றி அதிவேகத்தில் பயணிக்கும் (குவாசி பலிஸ்டிக் ஏவுகணை) பலிஸ்டிக் ரக ஏவுகணையாகும். நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை மிகத் துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் வலிமையுடையது. எனவே, எதிரிகள் இந்த ஏவுகணையை இடைமறித்து அழிப்பது மிகவும் கடினமானது.

இந்த ஏவுகணையின் இரு சோதனைகள் ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஒடிஸா மாநில கடலோரம் உள்ள ஏபிஜெ அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

பிரளய் ஏவுகணையின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச இயக்கத் திறனை மதிப்பிடும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், இலக்குகளைத் துல்லியமாக தாக்குவது உள்பட அனைத்து அம்சங்களும் சிறப்பாக செயல்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பிரளய் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்த டிஆா்டிஓ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தாா்.

இந்த ஏவுகணையை இமாரத் ஆய்வு மையம், பாரத் டைனமிக்ஸ் நிறுவனம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மற்றும் டிஆா்டிஓவின் பிற ஆய்வகங்கள் ஒன்றிணைந்து வடிவமைத்துள்ளன.

பால்டால் வழியாக அமர்நாத் யாத்திரை தொடக்கம்: இதுவரை 3.93 லட்சம் பேர் தரிசனம்!

பால்டால் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஜம்முவிலிருந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஜூலை 3-ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

அதானிக்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது! ராகுல்

தொழிலதிபர் அதானிக்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அரசு அழித்துவிட்டது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை விமர்சித்துள்ளார்.இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாததால... மேலும் பார்க்க

தெலங்கானாவில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 4 வழக்குரைஞர்கள் பதவியேற்றுக் கொண்டனர். உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு கூடுதல் நீத... மேலும் பார்க்க

ம.பி.யில் 23,000 பெண்கள், சிறுமிகளைக் காணவில்லை!

மத்தியப் பிரதேசத்தில் குறைந்தது ஒரு மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளாக சுமார் 23,000 சிறுமிகள் மற்றும் பெண்களைக் காணவில்லை என மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் மழைக்காலக் கூட... மேலும் பார்க்க

மாலேகான் குண்டு வெடிப்பு: பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து மும்பை என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங், முன்... மேலும் பார்க்க

6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட இந்தியாவின் 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந்நாட்டு உத்தரவிட்டுள்ளது.மத்திய கிழக்கில் மோதலை தூண்டிவிடுவதற்காக ஈரான் அரசு நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரி... மேலும் பார்க்க