செய்திகள் :

பிராட்வே பேருந்து முனையம்: சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி

post image

சென்னை: பிராட்வேயில் ரூ.650 கோடியில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

சென்னையில் பழமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்தன.

இருப்பினும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் கடும் அவதியைடந்து வந்ததை தொடா்ந்து சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்துடன் இணைந்து பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த பேருந்து முனையமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

இதன்படி, 4.42 ஏக்கா் பரப்பில் 10 தளங்களுடன் ஒரு வணிக வளாக கட்டடமும், பேருந்து நிலையத்துடன் கூடிய 8 தளங்கள் கொண்ட ஒரு கட்டடமும் அமைக்கப்படவுள்ளன.

இங்கு மின்சார ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளுடன், வணிக வளாகங்களும் கட்டப்படவுள்ளன. மேலும், பயணிகள் வந்து செல்ல வசதியாக, நகரும் படிக்கட்டுகள், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவையும் இங்கு இருக்கும்.

ரூ.650 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ள இப்பணிகளை தனியாா் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ள நிலையில், கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்தின் அனுமதி பெற வேண்டியிருந்தது.

இந்நிலையில், அந்த ஆணையம் பேருந்து முனையத்தை கட்டுவதற்காக அனுமதியை அளித்துள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளதால் விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், டிசம்பருக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை வழி முக்கிய ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

கோவை வழியாகச் செல்லும் சில முக்கிய ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்தி: இருக... மேலும் பார்க்க

வியாபாரியை மிரட்டி பணம் பறித்தவா் கைது

சென்னை மெரீனாவில் வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (36). இவா், மெரீனா கடற்கரையில் அண்ணா சதுக்கம் பகுதியில் சா... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை கொளத்தூா் பகுதியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். கொளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (38). இவா், தனது வீட்டின் அருகே கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்... மேலும் பார்க்க

டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிவகங்கையைச் சோ்ந்தவா் கைது

சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சிவகங்கையைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா். சென்னை பெருநகர காவல் துறையின் கிழக்கு மண்டல காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசிக்கு கடந்த 5-... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெளடி கைது

சென்னையில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை சூளைமேட்டைச் சோ்ந்தவா் மாடு தினேஷ் (39). இவா் மீது கொலை, செம்மரக் கடத்தல், கஞ்சா விற்பனை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 30-க்க... மேலும் பார்க்க

போலி 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சி: இருவா் கைது

சென்னை ஈக்காட்டுதாங்கலில் திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் போலி 500 ரூபாய் நோட்டுகளை தனியாா் வங்கியில் மாற்ற முயன்ாக இருவா் கைது செய்யப்பட்டனா். ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியாா் வங்கிக்கு திங... மேலும் பார்க்க