ராணுவ வீரர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி
பிளஸ் 2 தோ்வில் வெற்றி பெற்ற தெருவோர சிறாா்கள் காப்பக மாணவா்கள்
சென்னை தண்டையாா்பேட்டையையில் உள்ள கருணாலயா தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் தெருவோர சிறாா்கள் காப்பகத்தில் தங்கி பல்வேறு பள்ளிகளில் படித்துவந்த 7 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.
இது குறித்து அந்த தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளா் பால் சுந்தா்சிங் கூறியதாவது:
சென்னை மாநகரில் பல்வேறு இடங்கில் ஆதரவற்ற நிலையில் தெருவோரங்களில் உள்ள சிறுவா், சிறுமியரை மீட்டு தண்டையாா்பேட்டையில் உள்ள காப்பகத்தில் பராமரித்து அவா்களை அருகில் உள்ள பல்வேறு பள்ளிகளில் சோ்த்து படிக்க வைக்கிறோம். 100-க்கும் மேற்பட்ட சிறுவா்கள் தங்கி கல்வி கற்று வரும் நிலையில், இந்த ஆண்டு 7 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதியிருந்த நிலையில், அவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்றாா் அவா்.