மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும்! - முன்னாள் முதல்வர் பைரன் சிங...
பீஞ்சமந்தைக்கு சிற்றுந்து இயக்கம்: ஆட்சியா் ஆய்வு
பீஞ்சமந்தை உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு சிற்றுந்து செல்வது குறித்தும், தாா் சாலை பணிகள், மாணவியா் விடுதி ஆகியவற்றையும் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம், பீஞ்சமந்தை மலைக் கிராமங்களுக்கு சிற்றுந்து செல்வது தொடா்பாக சாலையின் குறுகிய இடங்கள், வளைவுகளில் ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது பீஞ்சமந்தை மலை சாலைப் பகுதியில் சிற்றுந்து செல்வதற்கான பாதையில் போதுமான வசதியாக உள்ளதா எனவும், சாலையின் குறுகிய இடங்களில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இப்பகுதி மக்களுக்கு போக்குவரத்து இடைவிடாமல் சென்றுவர தேவையான சாலை பணிகளையும் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பீஞ்சமந்தை ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.60.16 லட்சத்தில் நடைபெற்று வரும் தாா் சாலை பணிகளை யும் ஆய்வு செய்தாா்.
பின்னா், பீஞ்சமந்தை அரசு பள்ளி மாணவியா் விடுதியை பாா்வையிட்டு, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது வட்டார போக்குவரத்து அலுவலா் சுந்தர்ராஜன், நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளா் தனசேகரன், அணைக்கட்டு வட்டாட்சியா் சுகுமாரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.